பட்டாச போட்டு.. பட்டாளம் கூட்டு.. வெற்றி திளைப்பில் தவெகவினர் - கள நிலவரம் என்ன?

வாக்கு எண்ணிக்கையின் அடுத்தடுத்த சுற்றுகளிலும் இந்த முன்னிலை தொடருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது...
Dharapuram Bypoll Vote Counting
Dharapuram Bypoll Vote Counting
Published on: 
Updated on: 
1 min read

தாராபுரம், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தவெக வேட்பாளர்கள் முன்னிலை வகிப்பதாக வெளியாகும் தகவல்கள் கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் எதிரொலியாக, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்தில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மூர்த்தி தலைமையில் தொண்டர்கள் திரண்டனர். அங்கு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், மேளதாளங்களுக்கு ஏற்ப நடனமாடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் பனையூர் தலைமை அலுவலக வளாகம் விழாக்கோலம் பூண்டது.

தொகுதியில் 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 41,327 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அதே போல மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் 38,128 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில திமுக வேட்பாளர்களும், அதிமுக வேட்பாளர் மூன்றாவது இடத்தில் உள்ளார். வாக்கு எண்ணிக்கையின் அடுத்தடுத்த சுற்றுகளிலும் இந்த முன்னிலை தொடருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா முன்னிலை வகிப்பதும், மதுராந்தகம் தொகுதியிலும் மரகதம் குமரவேல் முன்னிலையில் இருப்பதாக வெளியாகும் நிலவரங்களும் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், இரு தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தவெக தொண்டர்கள் பனையூர் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், இரு தொகுதிகளிலும் அதிகாரப்பூர்வமான வெற்றி அறிவிப்பு வெளியாகும் வரை இறுதி முடிவை உறுதியாகக் கூற முடியாது. தொடர்ந்து நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நீடிக்குமா, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் இறுதியில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com