“ஜோசப் விஜய் ஆகிய நான்”.. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்!

ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது..
vijay tvk
vijay tvk
Published on
Updated on
1 min read

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான பதவியேற்பு விழாவில், பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு முன்னிலையில் அவர் முதலமைச்சராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். கடந்த நான்கு நாட்களாக விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த வரலாற்று நிகழ்வு தற்போது நடைபெற்றது. 

118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தனது பெரும்பான்மையை நிரூபித்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆட்சியை அமைக்கும் வகையில் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். “ஜோசப் விஜய் ஆகிய நான்...” என்று தொடங்கி அவர் எடுத்த உறுதிமொழி அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

விஜய்யுடன் சேர்ந்து மொத்தம் 9 அமைச்சர்களும் இன்று பதவியேற்று உள்ள நிலையில், அவருடன் சேர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜுனன், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சராக பதவியேற்ற உடனேயே விஜய் தலைமை செயலகத்திற்கு செல்ல உள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில் தலைமை செயலக வளாகம் முழுவதும் பூக்கோலங்கள் மற்றும் அலங்காரங்களுடன் சிறப்பாக தயாராக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது விஜய் ராகுல் காந்தியுடன் சேர்ந்து சத்யபவன் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள விஜய்யின் இந்த பதவியேற்பு விழா, மாநில அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com