TVK to DMK : “விஜய்யின் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை” .. திமுகவில் அஜிதா ஆக்னல் - பின்னணி என்ன?

அஜிதா ஆக்னல், மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்தனர்
ajitha agnel in DMK
Published on
Updated on
2 min read

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெகவின் ஆரம்பகால முக்கிய உறுப்பினராக கருதப்பட்ட அஜிதா ஆக்னல், அந்தக் கட்சியிலிருந்து விலகி தற்போது திமுகவில் இணைந்திருப்பது,அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக வாழும் தூத்துக்குடியில், கடந்த சில மாதங்களாக தவெக தலைவர் விஜய் தீவிரமாக அமைப்பு வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். மீனவர் சமூக ஆதரவு, இளைஞர் சக்தி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனை, வேலைவாய்ப்பு போன்ற உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து தவெக தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியது. ஆனால், கட்சியின் வேகமான வளர்ச்சிக்கு உட்கட்சி பிரச்சினைகள் சில மாற்றங்களை ஏற்படுத்தியது.

ஆரம்பம் முதலே கட்சி செயலில் தீவிரமாக  இருந்த அஜிதா ஆக்னல், மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்தனர். இதன் விளைவாக அவர் தனது ஆதரவாளர்களுடன் போராட்டங்களில் ஈடுபட்டு, கட்சி அலுவலக முற்றுகை, விஜய்யின் வாகனத்தை மறித்தது போன்ற சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. நிதி மற்றும் ஒழுங்கீன குற்றச்சாட்டுகள் காரணமாகவே அவருக்கு பதவி வழங்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியானது. பின் தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்திகள் வந்தன. பின்னர் உடல்நலம் குணமடைந்த அஜிதா, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தாலும், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனால யாரும் எதிர்பார்க்காத நிலையில், மாற்றாக விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத் தூத்துக்குடி சட்டமன்ற தேர்தலுக்கான தவெக வேட்பாளராக அறிமுக படுத்தபட்டார். இதனால் அஜிதாவிற்க்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. இது அவரின் ஆதரவாளர்களையும் அதிருப்தி அடைய செய்தது. தூத்துக்குடியின் அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு, அஜிதா தனது அடுத்த கட்ட அரசியல் பயணமாக தற்போது, திமுகவைத் தேர்வு செய்தார். சில தரப்பினரின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களை சந்தித்த அஜிதா, அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.

TVK ajitha agnel

பின்னர் செய்தியளர்கள் சந்தித்த அஜிதா “ தவெகவில் பெண்களுக்கு மரியாதையோ உரிய அங்கீகாரமோ வழங்கவில்லை” என தெரிவித்துள்ளார். இந்த மாற்றம், தூத்துக்குடி அரசியலில் மட்டுமல்லாமல், 2026 தேர்தல் அரசியல் சமன்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com