பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்த விஜய் நண்பர்.. அஜிதா ஆக்னல் உயிரைக் கொடுத்து போராடிய தொகுதிக்கு இப்படியொரு நிலைமையா?

"விஜய் தூத்துக்குடிக்கு விரைவில் பிரச்சாரத்திற்கு வருவார். என் மேலே என் நண்பனுக்கு தனிப்பட்ட பார்வை..
ajitha tvk
Published on
Updated on
2 min read

ஏப்ரல் 23 நடவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியலை  கடந்த மார்ச் 29 தேதி வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் விஜய். தூத்துக்குடி தமிழக வெற்றி கழக வேட்பாளராக நடிகரும் விஜயின் நண்பருமான ஸ்ரீ நாத் என்பவரை அறிமுகப்படுத்தினர். தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னல் தவெகவில் தீவிரமாக பணியாற்றி வந்த பெண் வேட்பாளர். இவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் பனையூரில் விஜய்யின் காரை மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவருக்கு பதிலளிக்காமலும், அவரை பொருட்படுத்தாமலும் கடந்து சென்றார். அதைத் தொடர்ந்து தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயற்சி செய்துள்ளார். அது சமூக வலைத்தளத்திலும் அரசியல் விவாதங்களிலும் பெரும் பேசும் பொருளானது. அதற்கு பின் அவரை பற்றிய கேள்விகளை  தவெக நிர்வாகிகள் தவிர்த்தே வந்தனர். ஆனாலும் அவர் தொடர்ந்து தவெகவில் தனது அரசியல் பணியை தொடர்ந்து வந்துள்ளார்.
அதற்கு பின் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலில் அஜிதா ஆக்னல் பெயர் இடம்பெறுமென எதிர்பார்த்திருந்த நிலையில் இப்போதும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தூத்துக்குடி தொகுதிக்கு நடிகரும் விஜயின் நண்பருமான ஸ்ரீ நாத் தவெக வேட்பாளராக அறிமுப்படுதியது, மீண்டும் அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தூத்துக்குடி  சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கீதாஜீவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நேற்று தூத்துக்குடியில் கனிமொழி எம்பி அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனையடுத்து, தவெக வேட்பாளர் ஸ்ரீ நாத் தூத்துக்குடி வந்திருந்தார். வரும் ஏப்ரல் நான்காம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வததாக அறிவித்திருந்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், "தூத்துக்குடியில் தவெக - விற்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் வெளி ஆள் கிடையாது. இந்த தூத்துக்குடி மண்ணின் மைந்தர்" என்றும் தூத்துக்குடிக்கும் எனக்கும் பெரிய கனெக்ட் உள்ளது. நான் நினைத்து இருந்தால் நடிகையை திருமணம் செய்து இருக்கலாம். ஆனால் நான் செய்யவில்லை. தூத்துக்குடி பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணி தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்தேன். என்னுடைய மகள் பிறந்ததும் தூத்துக்குடியில் தான்" என்றும் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து "விஜய் தூத்துக்குடிக்கு விரைவில் பிரச்சாரத்திற்கு வருவார். என் மேலே என் நண்பனுக்கு தனிப்பட்ட பார்வை  இருக்கும். மேலும் அவர் அவரின் கடமையை செய்வார்" என்றும் தெரிவித்திருந்தார்.  

செய்தியாளர்கள் எம்பி கனிமொழியின் தூத்துக்குடி வருகை பற்றியும் தேர்தல் போட்டியை பற்றியும் எழுப்பிய கேள்விக்கு "தூத்துக்குடியில் எம்பி கனிமொழி எங்கு இருக்கிறார். கனிமொழிக்கு தூத்துக்குடியா? தூத்துக்குடி மக்களுக்கு தளபதி மூலம் பல்வேறு திட்டங்களை நான் செய்வேன்" என்றும் பதிலளித்துள்ளார். தவெக அஜிதா ஆக்னலுக்கு தூத்துக்குடியில் சீட் மறுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு? அஜிதா ஆக்னல் விஷயம் தனிப்பட்ட விஷயம், கழகம் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றும் மேலோட்டமாக பதிலளித்தார். மேலும், "நான் சினிமாவை விட்டு வெளியே வந்து விட்டேன். படங்கள் முழுவதும் முடித்து விட்டேன். 18 முதல் 85 வயது வரை உள்ளவர்கள் தளபதி பக்கம் தான்.. தலைவர் தளபதி கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றி பெறுவார்" என்றும் தெரிவித்தார்.

வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற கூட்டத்தில் கண்ணாடி பாட்டில்  எரியப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு, "அநாகரிமான செயல், ஆதவாளர் போர்வையில் வந்து இந்த வேலையை செய்துள்ளார்கள், தூய சக்தியான தமிழக வெற்றி கழகம் தீய சக்தியான திமுகவை விரட்டியடிப்போம்" என்றும் குறிப்பிட்டுள்ளார். "ஏ-டீம் பி-டீம் எல்லாம் இல்லை மக்கள் டீம் மட்டும் தான் அது விஜய்க்கு தான்" என்று நகைச்சுவையாக பேசி இருக்கிறார். தூத்துக்குடி தொகுதியில் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்ற கேள்விக்கு, "காலம் பதில் சொல்லும்'' என்ற அவர், ஓட்டு எண்ணிக்கை நாள்  எப்போது என்று தெரியாமல் தேதியை மாற்றி குறிப்பிட்டு மழுப்பியுள்ளார். முன்னதாக, ஸ்ரீ நாத் மக்களுடன் நெருங்கி பழகும் விதமாகப் பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com