'தவெக படை சூழ்ந்த தாராபுரம்' 7,000 காவலர்கள் பாதுகாப்பு; வழிநெடுக காத்திருக்கும் தொண்டர்கள்!

3 மணிக்கு தாராபுரம் திடலை அடைந்து பரப்புரை செய்கிறார் விஜய். பரப்புரையை முடித்துக்கொண்டு மீண்டும் கோவை வழியாக இன்று இரவே சென்னை திரும்புகிறார்.
Dharapuram
'தவெக படை சூழ்ந்த தாராபுரம்' 7,000 காவலர்கள் பாதுகாப்பு; வழிநெடுக காத்திருக்கும் தொண்டர்கள்!AI Enhanced
Published on: 
Updated on: 
1 min read

தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக இன்று விஜய் செல்கிறார். காலை 11:20 மணியளவில் நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். மாலை 3 மணியளவில் பொதுக்கூட்டம் தொடங்கும் நிலையில், அதிகாலை முதலே தவெக ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெறும் இடத்தில் குவியத் தொடங்கிவிட்டனர். இதனால் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

பொதுக்கூட்டத்தை நடத்த தாராபுரம்–உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5,000 இருக்கைகளில் தொண்டர்கள் அமரவும், 5,000 தொண்டர்கள் நின்று பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க 'கியூஆர்' குறியீட்டுடன் கூடிய சிறப்பு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறப்பட்டுள்ளது.

விஜய் பயணத் திட்டம்

தாராபுரம் பரப்புரையில் கலந்துகொள்ள மதியம் 1–2 மணியளவில் கோவை விமான நிலையம் செல்கிறார் முதலமைச்சர் விஜய். அங்கிருந்து சாலை மார்க்கமாகப் புறப்பட்டு, கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை, பல்லடம், குண்டடம் வழியாக தாராபுரம் சென்று, அங்கு நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

3 மணிக்கு தாராபுரம் திடலை அடைந்து பரப்புரை செய்கிறார் விஜய். பரப்புரையை முடித்துக்கொண்டு மீண்டும் கோவை வழியாக இன்று இரவே சென்னை திரும்புகிறார்.

பாதுகாப்புப் பணியில் 3,000 காவலர்கள்

முதலமைச்சர் பயணிக்கும் வழி முழுவதும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 7,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வழிகளில் மக்கள் பாதுகாப்பாக நின்று முதல்வரைப் பார்க்கும் வகையில் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தாராபுரம் தொகுதி முழுவதையும் கட்டுக்குள் கொண்டுவந்துள்ள காவல்துறையினர், முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் குவிந்துள்ளனர். அங்கிருந்து தாராபுரம் செல்லும் வழி முழுவதும் தொண்டர்கள் காணப்படுகின்றனர்.

தாராபுரத்தில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பொதுக்கூட்டத் திடலில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள், அவசர சிகிச்சைக்கான மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

Dharapuram
விஜய் டிவி 'ஹிட்' சீரியல் நடிகைக்கு கல்யாணம்! தேதியை அறிவித்த ஜோடி.. ரசிகர்கள் வாழ்த்து மழை!
Dharapuram
“விஜய் மாமா நீங்க தான் எங்களை படிக்க வைக்கணும்” - தாய் தந்தை இழந்து தவிக்கும் சிறுமிகள்.. கண்ணீருடன் முதல்வருக்கு கோரிக்கை!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com