"மதுராந்தகம், தாராபுரத்தில் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்" - Ex-MLA-க்களுக்கே மீண்டும் வாய்ப்பளித்த தவெக!

மதுராந்தகம் (தனி) - திருமதி K.மரகதம் குமரவேல், Ex.M.L.A.. மற்றும் தாராபுரம் (தனி) திருமதி P.சத்தியபாமா, Ex.M.L.An ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர்.
TVK By-Election 2026
TVK By-Election 2026
Published on
Updated on
2 min read

தவெக சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்யபாமா ஆகியோர் போட்டியிடப்போவதாக தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்யபாமா ஆகியோர் ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பின்னர் தங்களது MLA பதவிகளை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு என்ற அறிக்கையை முதல்வர் விஜய் வெளியுள்ளார். அதில், வருகிற 06.10.2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாகக் கீழ்க்காண்பவர்கள் போட்டியிடுவார்கள். மதுராந்தகம் (தனி) - திருமதி K.மரகதம் குமரவேல், Ex.M.L.A.. கழகத் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் தாராபுரம் (தனி) திருமதி P.சத்தியபாமா, Ex.M.L.An திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர். மேலும், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, அந்த இரு தொகுதிகளிலும், திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்று கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை களமிறக்குகின்ற நிலையில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தவெக கூட்டணி பலமாக இருப்பதால் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் திணறலை சந்திக்கலாம் என்று சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த இரு தொகுதிகளிலும் மும்முனை போட்டி கடுமையாக நிலவும் என்றும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இவர்கள் இருவரும் வெற்றிபெறுவது என்பது மிகவும் கடினமான காரியம் என்று மூத்தபத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், தற்போது அந்த தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற முனைப்பு காட்டும் என்றும் திமுக இந்த வெற்றி வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நேற்றைய தினம் தவெக கூட்டணி கட்சிகளுக்கு புதிய பெயர் வைக்கப்பட்ட நிலையில், வலுவான கூட்டணி கட்சிகளின் துணையோடு இந்த இடைதேர்தலை தவெக அரசு எதிர்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com