

தஞ்சாவூரில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை திரிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டு உதயநிதி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவிரி நீர் விவகாரம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெறுவதில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் திமுகவினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் கட்டமாக விமர்சித்தார். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சிலர் நடிகை திரிஷாவின் பெயரை முழக்கமிட்ட நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் உதயநிதி, இரட்டை அர்த்தத்தில் பேசிவிட்டு, பின்னர் தான் காவிரி தண்ணீரைப் பற்றித்தான் குறிப்பிட்டதாக உதயநிதி விளக்கம் அளித்தார். எனினும், உதயநிதியின் இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில், அவரது பேச்சு 'இரட்டை அர்த்தம்' கொண்டதாக இருக்கிறது என்று கூறி பல்வேறு தரப்பினரும் விமர்சனத்தை முன்வைத்தனர்.
இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நடிகை குஷ்பூ, அமைச்சர் கீர்த்தனா, வைகோ உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும்ம் முன்னாள் அமைச்சர்கள் பலரும் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் பைரவி என்பவரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு மட்டுமின்றி சென்னை சைதாப்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்கக்கோரிய முறையீடு ஏற்கட்டுள்ள நிலையில், இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் காவல்துறையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரை தஞ்சாவூருக்கு அழைத்துசெல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலினை பிற்பகல் 12 மணி வரை கைது செய்யப்படக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சட்டஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்கவேண்டி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், காவிரி நீர் விவகாரத்தில் தொடங்கிய அரசியல் விவாதம் தற்போது உதயநிதியின் பேச்சை மையமாகக் கொண்டு பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர்க்கு விசாரணைக்காக அழைத்து செல்லவிருக்கும் நிலையில் திமுகவினர் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை காவல்துறையினர் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினோடு, N.R. இளங்கோவன், R.S. பாரதி உள்ளிட்டோர் உடன் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.