"விரைவில் Item song-ஆ..?" முதல்வர் பேசியதில் '10 ரீல்ஸ்' தேறும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு! திரையங்காக மாறிய சட்டப்பேரவை

இந்த 40 நாட்களில் உங்களுடைய போலீசார் எதை கிழிக்கிறார்கள்? என்பதுதான் நாங்கள் கேட்டும் கேள்வி"
Udhayanidhi Stalin
Udhayanidhi StalinUdhayanidhi Stalin
Published on
Updated on
2 min read

இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவரது உரையை சரியாய் 9 மணிக்கு தொடங்கினார். அவர் பேசுவதை அமைதியாகத்தான் கேட்டுக்கொண்டு இருந்தோம். வழக்கம் போல பிரச்சாரங்களில் பேசுவது போன்று சினிமா பாணியில் டயலாக்களை பேசினார். அதன் பின்பு சில தவறான உண்மைக்கு புறம்பான சில தகவல்களை அவையில் பதியவைத்தார். அதனைதொடந்து நானும் நமது சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களது எதிர்ப்பினை தெரிவித்தோம். மேலும், பேச அனுமதி அளிக்கவேண்டும் என்று கேட்டேன். ஆனால், சபாநாயகர் எங்களை அனுமதிக்கவில்லை. நேற்று எதிர்க்கட்சி தலைவராக நான் பேசும்போது அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசத்தான் செய்தார்கள். முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் எந்த பதிலும் அளிக்கவில்லை. சபாநாயகர் அவை முடிந்தது என்று குறியபிறகு நாங்கள் எழுந்து வீட்டிற்கு சென்று விட்டோம். வீட்டிற்கு போய் சென்றபின்பும் கூட ஒரு அமைச்சர் பேசிக்கொண்டேதான் இருந்தார்.

முதல்வர் பேசியதற்கு ஆதாரம் கேட்டபோது அதற்கு எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. முதல்வர் இன்று ஒரு ஸ்கிரிப்டை எடுத்து வந்திருந்தார். அதை முடிக்கும் வரை நான் யாருக்கும் பதிலளிக்க மாட்டேன் என்ற தொனியில் பேசினார். இடையில் யாரும் கட் (Cut) சொல்லக்கூடாது என்ற மனநிலையில், ஷூட்டிங் போனால் எப்படி இருப்பாரோ அப்படித்தான் சட்டமன்றத்தை ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றியுள்ளார் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். ஊடகங்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டுதான் இருக்கிறது ஆனால் அவர் பதிலளிப்பது இல்லை. சட்ட மன்றத்தில் தங்களுக்கும் பதிலளிப்பது இல்லை. முதல்வராக அவரிடமிருந்து எதிர்பார்ப்பது, மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் பொறுப்பாக பதிலளிக்க வேண்டும் என்பதைத்தான் என்று அவர் பேசினார்.

யேத்துநடந்தாலும் முதல்வர் திமுக மீது பழிபோடுவதாகவும் ஊடகங்கள் வாயிலாக ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில் அவர், தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டதற்கு என்ன சமரசம் செய்து கொள்ளப்பட்டது? என்று கேட்டார். மேலும், குடியரசு தலைவருக்கு இருக்கும் ப்ரோட்டோகால் வேறு என்பது கூட முதல்வருக்கு தெரியாதா? ஆளுநருக்கு அது கிடையாது. நான் முதல்வன் திட்டத்தை முடக்கியது குறித்து கேள்வியெழுப்பியதற்கு தகுந்த பதில் அளிக்கவில்லை என்றும் மின்வெட்டு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவகாசம் கேட்டதோடு அதையும் திமுக மீது போட்டுள்ளார். பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகள் நடத்தும் போராட்டமும் திமுக-வின் தூண்டுதல் பேரில்தான் நடக்கிறது என்றும் கூறுகிறார் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

மேலும், ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் மாற்றுவேன் என்று சொன்னீர்களே, இப்போ இந்த 40 நாட்களில் உங்களுடைய போலீசார் எதை கிழிக்கிறார்கள்? என்பதுதான் நாங்கள் கேட்டும் கேள்வி" என்று உதயநிதி செய்தியாளர்கள் சந்திப்பில் கட்டமாக பேசினார். மேலும், ஆளும் கட்சியினை சேர்ந்தவர்களே குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவதாகவும், அதற்கான ஆதாரத்தை வெளியிடவும் தயார் என்று பேசினார். "பீரோ புல்லிங் போன்று 'அதிமுகவில் MLA புல்லிங்' நடைபெறுகிறது" என்றும் பேசினார். முதலமைச்சரின் அரைமணி நேர பேச்சில் 10 ரீல்ஸ் தேறும், இதை திட்டமிடுதான் செய்கிறார்கள். சட்ட பேரவையை சினிமா திரையரங்குபோல் மாற்றியுள்ளனர். விரைவில் 'ஐட்டம் சாங்' எல்லாம் போடப்போவார்கள் என்று நினைக்கிறேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com