

நமது தமிழகத்தில் காவிரி நதி பலநூறு மைல்கள் தவழ்ந்து வந்து, கடலெனும் பேரழகனின் மடியில் சாயும் காவிரி பூம்பட்டினத்தில், சோழப் பேரரசின் மணிமகுடமாய் வீற்றிருந்த உலகப் பெருநகரமான பூம்புகாரும் ஆழிப்பேரலைகளால் அழிந்து போனது. அந்த பிரமிக்கவிக்கும் துறைமுகநகரத்தினை ‘டிஜிட்டல் பூம்புகார்’எனும் திட்டத்தின் மூலம் உலகிற்கு வெளிக்கொணரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவியல் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பூம்புகார் நகரம் உலகின் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளைத் தன் வணிகக் கரங்களால் இணைத்த ஒரு சர்வதேசப் வணிக நகரமாக புகழப்பட்டது . உலகின் பல மூலைகளிலிருந்தும் வந்த உரோமானியர்கள், சீனர்கள், அரேபியர்கள் எனப் பற்பல மொழி பேசும் அயல்நாட்டவர் தங்கி வணிகம் செய்த பன்னாட்டுப் பகுதியாக காவிரிபூம்பட்டினம் விளங்கியது.
கடலில் நிறுதப்பட்ட ஆயிரகணக்கான கப்பல்கள், கால்வாய்கள், இரவும் பகலும் ஒயாத வணிக கட்டிடங்கள், மாட மாளிகைகள் கூட கோபுங்கள் எனம் பிரமிக்கதாக்க வகையில் கானப்பட்ட கடல் நகரம் கி.பி. 300 முதல் 500-க்குள் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஒரு பிரம்மாண்ட ஆழிப்பேரலையில் கடலுக்குள் இழுத்துச் சென்றதாகக் கடல்சார் ஆய்வுகள் உறுதிசெய்கின்றன.
இதனையடுத்து இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆதரவுடன், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலையுணர்வு மையம் முன்னெடுத்த ‘டிஜிட்டல் பூம்புகார்’ திட்டத்தின் மூலம் கடலுக்கு அடியில் உறைந்து கிடந்த ஒரு பிரம்மாண்ட நாகரிகத்தின் தடயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
தற்போதைய பூம்புகார் கடற்கரையில் இருந்து கிழக்கே, வங்காள விரிகுடாவில் சுமார் 30 முதல் 40 கிலோமீட்டர் தொலைவில், 50 முதல் 100 மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்க்கும் அந்தப் பழங்கால நகரத்தினை அச்சு அசலாக 3D முப்பரிமாண வடிவில் கணினித் திரையில் மறுஉருவாக்கம் செய்து வருகின்றனர் ஆய்வாளர்கள்.
கடலின் ஆழத்தில் மணற்பரப்புக்கு அடியில் புதையுண்டுள்ள செவ்வக மற்றும் வட்ட வடிவக் கட்டுமானங்கள், தெருக்கள் போன்ற அமைப்புகள் ஏஐ வழி முப்பரிமாண (3D) மாதிரிகளாக மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.மேலும் காவிரி ஆறு கடலில் கலந்த விரிவான பழைய முகத்துவாரப் பாதையை செயற்கைக்கோள் தரவுகளை அலசி ஏஐ வரைபடமாக்கியுள்ளது.
இது போன்ற கண்டுபிடிப்புகள் தொடரும் நிலையில் கடல் அலைகள் பல நூறாண்டுகளாக மறைத்து வைத்திருந்த தமிழ் மண்ணின் கம்பீரம், இப்போது அறிவியலின் துணையோடு மெல்லத் தலைநிமிர தொடங்கியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.