

கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நவம்பர் 19 அன்று மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அவரது உடல் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அமைச்சர்க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் என அனைவரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அவரது உடலுக்கு முதலமைச்சர் விஜய் அன்று மாலையே நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, வி.எஸ். பாபுவின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நேற்று திருவிக நகரில் உள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என சொல்லப்பட்டிருந்தது. மேலும் இறுதிச் சடங்கு முடிந்து மயானத்திற்கு அவரது உடல் எடுத்துச் செல்லும் போது, முதலமைச்சர் விஜய்-யும் உடலைச் சுமந்து சென்று அமரர் ஊர்தியில் ஏற்றினர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில் இறுதி ஊர்வலத்தில் ஒரு சர்ச்சை சம்பவம் நடந்துள்ளது. முதல்வர் விஜய் VS பாபுவின் உடலை இறுதியாக வணங்கி அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தார். அப்போது அருகில் மதிமுக தலைவர் வைகோ மற்றும் தவெக அமைச்சர்கள் தமிழன் பார்த்திபன், மரியா வில்சன், ஸ்ரீநாத், ராஜீவ் மற்றும் முதல்வரின் பர்சனல் செக்யூரிட்டி ஆகியோர் இருந்தனர். இதில் வைகோ முதல்வர் விஜயிடம் ஏதோ பேச முற்படுகிறார். அப்போது போக்குவரத்துக்கு துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் குறுக்கே கைவிட்டு அவரை தடுப்பது போல் நடந்து கொள்கிறார்.
உடனே வைகோ அமைச்சரை கைநீட்டி டென்ஷனாக பேசுகிறார். மேலும் கோபமாகவும் இருப்பதுபோல் நடந்துகொள்கிறர். அங்கு இருந்த அமைச்சர்கள் அனைவரும் ஷாக் ஆகி பார்க்கிறார்கள். உடனே முதல்வர் விஜய் சட்டென்று திரும்பி பார்க்கிறார். வைகோ அங்கிருந்து நகர்ந்து, எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.. இதில் அமைச்சர் அவரை தடுப்பது போலவும் அதற்கு வைகோ டென்ஷன் ஆனது போலவும் தான் தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவி நெட்டிசன்கள் இது குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இறுதி ஊர்வலத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, இவ்வாறு பேசினார். இயக்கத்தின் தியாகச் சுடராக இருந்தவர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு எல்லோரையும்—மனைவி, மக்கள், உற்றார் உறவினர், தமிழக வெற்றிக் கழகத்தினுடைய நிர்வாகிகள், குறிப்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவரையும் விட்டுவிட்டு அவர் மறைந்துவிட்டார். அந்தச் சுடர் நெருப்போடு சேர்ந்து கலந்து விடைபெற்றுவிட்டது.
வி. எஸ்.பாபு வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் முதலமைச்சர் விஜய் அவர்கள் காலில் செருப்பில்லாமல் நடந்து வந்து,வி. எஸ் பாபு அவர்கள் உடலைச் சுமந்து வந்து தகனம் செய்கிற இடத்திலே கொண்டுவந்து தகனம் செய்கிற வரை இருந்தார். இயக்கத்தினுடைய சட்டமன்ற உறுப்பினரையோ யாரையோ இழந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாக வகுத்திருக்கிறார்.
அவரது இந்த தியாக உணர்ச்சியும், கட்சிக்காரர்களை அரவணைக்கும் உணர்வும் கோடிக்கணக்கான தமிழர்கள் இதயத்தில் விஜய் என்ற மாமனிதருடைய பெயரை, புகழை இமயத்தின் உச்சியில் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.