
சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் அதிமுக -வின் வைகை செல்வன், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை சந்தித்தார் இந்த சந்திப்பு தற்போது பேசு பொருளாகியுள்ளது.
அதிமுக கூட்டணிக்கு அழைப்பு..!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கக்கூடிய நிலையில் அதற்குள் பாஜக - அதிமுக வுடன் கூட்டணி உருவாகியுள்ளது. காரணம் தமிழ்நாடு பாஜக இன்னும் சரியாக காலூன்றவில்லை என்பதே ஆகும். மேலும் திமுக கூட்டணி பலமாக உள்ளது. இது போதாதென்று விஜய் -ம் கட்சி ஆரமித்துள்ளார். ஆகவேதான் தேர்தல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக தனது செயல்திட்டத்தினை துவங்கியுள்ளது. ஆனால் கூட்டணி அமைத்து இத்துணை நாட்கள் ஆன பின்னும் அதிமுக -பாஜக கூட்டணி பிக் அப் ஆகவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே தான் திமுக - கூட்டணியை உடைக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளது பாஜக. ஏற்கனவே அதிமுக தலைவர்கள் பலர் திருமா வல்லவனுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் கொள்கை முரண் காரணமாக அவர் செல்லவில்லை. தற்போது இந்த மும்முனை சந்திப்பு பேசுபொருளாகியுள்ளது.
வைகை செல்வன் பேட்டி!
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகை செல்வன் திமுக கூட்டணியில் முதல் ஓட்டை விழுந்து விட்டது என தெரிவித்தார். மேலும் 2026 -தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.
திருமா மறுப்பு!
நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், அரசியலில் பொறுமை, நிதானம் மிகவும் முக்கியம். நமது கொள்கை எதிரி யார்? என்பதை நான் முதலில் அறிந்து வைத்திருக்க வேண்டும்.அதிமுக -உடன் இணைவதில் பிரச்சனை இல்லை. ஆனால் அதிமுக உடன் பாஜக, பாமக இருக்கிறது. இவர்களோடு ஒருநாளும் விசிக இணையாது. நாங்கள் திமுக - கூட்டணியில்தான் தொடர்வோம் என்றார். 20 நிமிட சந்திப்பில் என்ன பேசினீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதுக்கு பதிலளித்த திருமா, “இது வெறும் இலக்கியச்சந்திப்பு தான்” என்றார்.
ஏற்கனவே பலமுறை அதிமுக -விலிருந்து திமுக அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது ஆனால் தேர்தல் சமையத்தில் இந்த சந்திப்பு நடந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.