வேடசந்தூர்.. 100 பூத்களில் நிலவும் கடும் இழுபறி! திமுகவை முந்துமா அதிமுக? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் ரிப்போர்ட்!

இரு கட்சிகளுக்கும் இடையே எந்தவொரு பெரிய வாக்கு வித்தியாசமும் தற்போது இல்லை
vedasandur constituency
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் வேடசந்தூர் தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே விரிவாகத் தரப்பட்டுள்ளன.

வாக்காளர் விவரம் மற்றும் சமூகக் காரணிகள்:

வேடசந்தூர் தொகுதியில் 18 முதல் 25 வயதுடைய இளைய தலைமுறை வாக்காளர்கள் 13.2% ஆக உள்ளனர். சமூக ரீதியாக, ஒக்கலிக கவுண்டர்கள் 29% ஆகவும், சோழிய வேளாளர்கள் 13% ஆகவும் உள்ளனர். இவர்களைத் தவிர யாதவர்கள் 10%, அருந்ததியர்கள் 10%, ஆதிதிராவிடர்கள் 8% எனப் பரவலாக உள்ளனர். மற்ற சமூகத்தினர் 30% உள்ளனர். இது ஒரு கலவையான தொகுதியாகும்.

உள்ளூர் பிரச்சனைகள்:

இங்குள்ள நூற்பாலைத் தொழிலாளர்களுக்குப் போதிய ஊதியம் மற்றும் பாதுகாப்பு இல்லை என்பது மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது. நகர்ப்புறங்களில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் ஒழுங்கற்ற குடிநீர் விநியோகம் குறித்துப் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது.

வேடசந்தூர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
vedasandur constituency

தேர்தல் முடிவுகள் ஒப்பீடு (2021 vs 2024):

2021-ல் திமுக 50% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 46.8% வாக்குகளைப் பெற்றுத் தனது பலத்தைத் தக்கவைத்துள்ளது. அதிமுக 2021-ல் 41.9% பெற்றிருந்தது, 2024-ல் 44.8% ஆகத் தனது நிலையை உயர்த்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி 4.2%-லிருந்து 6.4% ஆக உயர்ந்துள்ளது.

2026 தேர்தல் கணிப்பு - பூத் லெவல் ஆய்வு:

2021-ல் திமுக 112 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் அது 128 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 94 பூத்களில் தனது பலத்தைத் தக்கவைத்துள்ளது. வரும் 2026 தேர்தலில், 95 பூத்களில் திமுகவும் 95 பூத்களில் அதிமுகவும் சம பலத்துடன் உள்ளன. சுமார் 100 பூத்கள் ஸ்விங் பூத்களாக இருப்பதால், இது ஒரு மிகப்பெரிய மிராக்கிள் தொகுதியாக மாற வாய்ப்புள்ளது.

கான்சிலிடிக்ஸ் கணிப்பின்படி, வரும் தேர்தலில் அதிமுக 35% வாக்குகளையும், திமுக 35% வாக்குகளையும் பெறும். இரு கட்சிகளுக்கும் இடையே எந்தவொரு பெரிய வாக்கு வித்தியாசமும் தற்போது இல்லை. இங்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 25% வாக்குகளைப் பிரிக்கும். குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் விஜய்யின் பக்கம் சாய்வது அதிமுகவின் வெற்றி வாய்ப்பைச் சமநிலைப்படுத்துகிறது. தற்போதைய நிலவரப்படி, இது ஒரு மிக நெருக்கமான இழுபறி தொகுதியாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com