
2026 தேர்தல்உண்மையில் இன்னும் 10 மாதங்களுக்கு தமிழ் நாடு அல்லோலப்படும் என்பதில் ஐயமில்லை. திமுக தனது கூட்டணி குறித்து மிகத்தெளிவானை போக்கை கொண்டுள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்து 3 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் இந்த கூட்டணி களத்தில் வலுபெறவில்லை. தமிழகத்தில் பாஜக -வின் ஆதரவு வாக்குகள் மிக மிக குறைவு என்ற பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அந்த விமர்சனங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை பாஜக அதிமுக கூட்டணி வலுவாக்கத்தான் உள்ளது என அதிமுக -வின் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார். இந்த நிலையில்தான் சென்னை முகப்பேரில் GBS laptop sales and service எனும் பெயரிலான மடிக்கணினி விற்பனையகத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவிற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர்.
“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை , முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. சிலர் தலைமைச் செயலகத்தில் இருந்து காவல்துறையை கட்டுப்படுத்துகின்றனர். இரும்பு கம்பியால் அடித்து அஜித்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை தனிப்படை நேரடியாக எப்படி விசாரித்தது? என சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார்.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார் , பின்னணியில் காவல்துறையை சேர்ந்தவர் இருப்பதாக தகவல் வந்துள்ளது. காவலர்களே குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். லாக் கப் மரணம் என்பது காவல்துறை நடத்தும் படுகொலை என்றுதான் சொல்ல வேண்டும் , அவை அனைத்திற்கும் முதல்வரே பொறுப்பேற்க வேண்டும் .
நிகிதா பெயரில் பல மோசடி வழக்குள் உள்ளன. 2011 முதலே திருமண மோசடியில் ஈடுபட்டே வந்துள்ளார். முதல்வர் எளிதாக ‘சாரி’ என கூறி கடந்து செல்ல முடியாது.. நிகிதா தலைமைச் செயலகத்தில் யாரை தொடர்பு கொண்டார் என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். அந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் . மேலும் விஜயுடன் கூட்டணிக்காக பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா..? என கேள்வி எழுப்பட்டதற்கு "நல்லதே நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள்..
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் தொடக்க விழாவில் நான் பங்கேற்கிறேன். எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் அனைத்து இடங்களிலும் பாஜக அதிமுகவுடன் இணைந்து செயல்படும்... அதிமுகவுடன் இணைந்து இனி அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்போம். விஜயுடன் கூட்டணி குறித்து பேசினோமா என்பது குறித்து இப்போது நான் எந்த கருத்தையும் கூற முடியாது , தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன. நல்லதே நடக்கும். அஜித் குமார் குடும்பத்திற்கு கூடுதலாக 50 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். சாத்தான்குளம் ஜெயராஜ் , பெனிக்ஸ் வழக்கில் இதுவரை எந்த தீர்ப்பும் வழங்கப்படாமல் உள்ளது. சாத்தான்குளம் வழக்கிற்கு ஒரு நீதி, அஜித் குமார் அவர்களுக்கு ஒரு நீதி என்று இருக்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை மறைப்பதற்காகவே ஓரணியில் திரள்வோம் என தமிழக முதலமைச்சர் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.. தனிப்பட்ட முறையில் நான் முதலமைச்சரை விரும்பக் கூடியவன் ஆனால் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக செய்ய வேண்டிய பணிகளை செய்யவில்லை.
பாஜக சார்பில் தேர்தல் பிரசார நடைபயணம் தொடங்குமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்… அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்...பாமக பிளவிற்கு பாஜக காரணமல்ல. பாமக தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும்.. " என்று கூறினார்.
தற்போது திருபுவனம் அஜித் குமார் விசாரணை மரணத்திற்கு பிறகு இந்த 2 கட்சிகளும் ஓரணியாக திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இவர்களின் இந்த ஒற்றுமை தேர்தல் சமயத்தில் இவர்களுக்கு கைகொடுக்கும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.