குழந்தைக்கு 'விஜய்' என்று பெயர் வைத்த 'விஜய்' - அமைச்சர்கள் கொடுத்த 'அந்த ஒரு ரியாக்ஷன்!' கோவையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

தனக்கு ஒரு அண்ணனாக, அப்பாவாக எல்லாமே முதலவர் செய்ததாக நெகிழ்ச்சியுடன் பேசினார்.
Vijay names baby boy
Vijay names baby boy
Published on: 
Updated on: 
2 min read

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் விஜய் கோவையிலிருந்து சாலை வழியாக பெருந்துறை சென்றுள்ளார். இந்நிலையில் விஜயமங்கலம் டோல்கேட் அருகே மூன்று மாத கை குழந்தையுடன் சேலத்தில் இருந்து வந்த பூஜா ஸ்ரீ என்ற பெண், விஜய் தனது குழந்தையை சந்திப்பார் என்று நினைத்து நீண்ட நேரமாக காத்திருந்துள்ளார்.

ஆனால், சந்திக்காமல் அவர் சென்றது மிகவும் வருத்தம் அளிப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். மேலும், தனது மூன்று மாத குழந்தைக்கு இதுவரை பெயர் வைக்கவில்லை என்றும் "விஜய் அண்ணா.. பெயரைத்தான் அவர் கையால வைக்கணும்" என்று அவர் தெரிவித்திருந்தார். மேலும் , காலையில் இருந்து முதல்வருக்காக காத்திருப்பதாகவும், செயற்குழு உறுப்பினர் சுலோச்சனா என்பவரது உதவியால் தான் இங்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தாராபுரத்தில் எளிதாக பார்க்க முடிந்த முதல்வரை விஜயமங்கலத்தில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பார்க்கமுடியவில்லை என்றும், முதல்வர் விஜய் வேனில் இருந்து வெளியே வராமல் காரில் அமர்ந்தபடியே கையசைத்து சென்றது ஏமாற்றத்தை அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் விஜய், ஈரோடு பெருந்துறையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வாங்கியபின், கோவை சென்ற முதலமைச்சர் காவல்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபின் பூஜா ஸ்ரீயை சந்தித்து குழந்தைக்கு தங்கமோதிரம் அணிவித்தார்.

சுலோச்சனா
சுலோச்சனா

குழந்தையை தூக்கி கொஞ்சிய முதல்வர் விஜய், அந்த குழந்தைக்கு விஜய் என்று பெயரிட்டார். மேலும், முதல்வர் விஜயை காணமுடியவில்லை என்று ஏமாற்றத்துடன் இருந்த பூஜா ஸ்ரீ என்ற பெண் தற்போது அவரை கண்டதும் ஆனந்த கண்ணீர் சிந்த ஆரம்பித்தார். அப்போது அதை கவனித்த விஜய் "கண்ணை துடைங்க" என்று கூறினார். அதனை தொடர்ந்து குழந்தைக்கு 'தாய் மாமன்' தங்கமோதிரத்தை அணிவித்தார். மேலும், குழந்தையை வாஞ்சையோடு கொஞ்சியது மட்டுமின்றி குழந்தையின் காதில் மூன்று முறை "விஜய்.. விஜய்.. விஜய்" என்றும் முதல்வர் கூறி அந்த குழந்தைக்கு பெயர் வைத்தார். குழந்தையின் தாய் பூஜா ஸ்ரீ-யிடம் பேசியபின்னர், அவரை அன்போடு அணைத்தார்.

முதல்வர் விஜயை சூழ்ந்திருந்த அமைச்சர்களாக என். ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் முகத்தில் புன்னகையுடன் அதனை கண்டு ரசித்தனர். முதல்வர் இறுதியாக செல்லும்போது குழந்தையின் குழந்தையின் கைகளை பிடித்து விளையாட அதை அருகில் இருந்த அமைச்சர்கள் பூரிப்போடு அதை கண்டு ரசித்தனர். அமைச்சர் என். ஆனந்த் இது அனைத்தையும் ஆனந்தத்தோடு பார்த்து ரசித்தார். இந்த சம்பவமானது காண்போரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

CM Vijay names 3-month-old baby boy
CM Vijay names 3-month-old baby boy

அதன் பின்னர் செய்தியாளரை சந்தித்த பூஜா ஸ்ரீ, "ஏன் இவ்வளவு தூரத்தில் இருந்து 'ரிஸ்க்' எடுத்து வந்தீர்கள்?" என்று முதல்வர் கேட்டதாகவும் "அவரை காண்பதற்கு எவ்வளவு தூரத்தில் இருந்து வேண்டுமானாலும் வருவேன்" என்று பூஜா ஸ்ரீ கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்றும் தாங்கள் மூவருமே பெண் குழந்தைகள்தான் என்றும் தனக்கு ஒரு அண்ணனாக, அப்பாவாக எல்லாமே முதலவர் செய்ததாக நெகிழ்ச்சியுடன் பேசினார். மேலும், பூஜா ஸ்ரீயின் தாய், தனது மகளுக்கு சிறுவயதில் இருந்தே விஜய் என்றால் மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டு பேசினார். தற்போது தனது ஆண் குழந்தைக்கு 'விஜய்' என்று முதல்வர் விஜய் வாயிலிருந்தே பெயரிட்டது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பூஜா ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.