vijay
vijay

“மீண்டும் மீண்டுமா!?” விஜய் காரின் முன் பாய்ந்த தொண்டர்கள்!! புறவழிச்சாலையில் பரபரப்பு!!

விஜய்-ன் காரை தொண்டர்கள் சூழ்ந்து ஆர்பரித்துக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனேவே...
Published on

வருகிற 2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர். அரசியல் விமர்சகர்கள். 

இந்த சூழலில் கரூர்  சம்பவத்திற்கு பிறகு,  விஜய் -க்கு மக்கள் சந்திப்பிற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை, பாண்டிச்சேரியில், 5000 -பேர் மட்டுமே வர வேண்டும் என ஆய்வுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழலில்,  ஈரோடு பெருந்துறையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 

ஈரோடு விஜய் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் தீவிரமாக மேற்கொண்டுள்ளார். அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு தனது பகுதியில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் அவர் ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக செய்துள்ளார். 

இந்நிலையில் காலையில் தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த விஜய், கார் மூலமாக கூட்டம்  நடக்கும் இடத்திற்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் புறவழிச்சாலையில் வந்துகொண்டிருந்த விஜய்-ன் காரை தொண்டர்கள் சூழ்ந்து ஆர்பரித்துக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனேவே திருச்சி , கரூர் கூட்டங்களில் வாகனத்தை பின்தொடர்ந்து கால தாமதத்தை ஏற்படுத்தியது கட்சியின் மீது வைக்கப்பட்ட பெரும் விமர்சனம் ஆகும். தற்போது மீண்டும் அதே செயலை தவெக -வினர் செய்து வருவதை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com