“எச்.ராஜாவின் மற்றொரு குரலாக தான் விஜய் பேசுகிறார்” - திருமாவளவன் விமர்சனம்!!

"தேர்தல் நேரத்தில் தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்” என...
vijay vs vck
vijay vs vck
Published on
Updated on
2 min read

2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

இந்த சூழலில் கரூர்  சம்பவத்திற்கு பிறகு,  விஜய் -க்கு மக்கள் சந்திப்பிற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை, மேலும் கடந்த 2 மாதங்களாக தமிழக வெற்றிக்கழகமே ‘silent Mode’ -ல் தான் இருந்தது. இந்த சூழலில்தான், கடந்த வாரத்திலிருந்து விஜய் மக்களை சந்திக்க துங்கியுள்ளார், மேலும் மக்கள் சந்திப்பிலும் அவருக்கு ரோட் ஷோ -க்கு அனுமதி கிடையாது. பாண்டிச்சேரியை அடுத்து, ஈரோட்டிலும் நேற்றைய தினம் அவர் திறந்தவெளி மக்கள் சந்திப்பை மேற்கொண்டார். 

ஈரோடு விஜய் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் தீவிரமாக மேற்கொண்டார். அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு தனது பகுதியில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் அவர் ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக செய்திருந்தார். 

இந்த சந்திப்பில் விஜய் மிக மிக காட்டமாக திமுக -வை விமர்சித்திருந்தார். மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பேசியதை மேற்கோள் காட்டி திமுக ஒரு தீய சக்தி என கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

மகாத்மாகாந்தி பெயரால் இத்தனை ஆண்டு காலம் இயங்கி கொண்டு இருந்த ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பா.ஜ.க. அரசு தரம் தாழ்ந்து அரசியல் செய்வதற்கு இத்தகைய சான்று வேறு இல்லை. மிக அர்ப்பணமான அரசியல். தேசத்தால் உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர். தேச பிதா என்று போற்றப்பட கூடியவர்.  அவருடைய கருத்துக்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும்  கருத்தியல் மோதல் இருந்தாலும் கூட தேசிய விடுதலை போராட்டத்தை மதிக்கிறது. ஆகவே பெயர் மாற்றம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் 24 -ந் தேதி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கலந்து கொள்ளும். 23 ந்தேதி இடது சாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து போராட்டம் அறிவித்து இருந்தோம். அந்த போராட்டம் 24 -ம் தேதி நடக்கும்.

விஜய் ஒவ்வொரு நிகழ்வும் பேச்சும் திமுக வெறுப்பை மட்டுமே மையமாக கொண்டுள்ளது. நாட்டை பற்றியோ மக்கள் நலன்கள் பற்றியோ கவலை இருப்பதாக தெரியவில்லை. திமுக வெறுப்பை மட்டுமே தனது கடமையாக கொண்டு செயல்படுகிறார். மக்கள் கவனித்துக் கொண்டுதான் வருகின்றனர். அவரது திட்டம் நோக்கம் என்ன என்பதை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். தேர்தலில் அது வெளிப்படும்.

நான் தற்போது திமுகவிற்கு ஆதரவாக பேசுவதாக தோன்றும். திமுக.மீது குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சொல்லியவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது வரலாறாக இருக்கிறது. ஜெயலலிதா, எச்.ராஜா ஆகியோர் சொன்னதையே பேசுகிறார். எச்.ராஜாவின் மற்றொரு குரலாக தான் விஜய் பேசுகிறார். சீமான் பேச்சு வெளிப்படுகிறது. இவர்கள் எல்லாம் யார் என்பது சமகாலத்தில்  வெளிப்படையாக தெரியவருகிறது. தேர்தல் நேரத்தில் தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்” என அவர் பேசியிருந்தார் இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com