உற்சாகத்தில் பெண்மணி செய்த செயல்.. சர்பிரைஸ் ஆன விஜய்.. ரசிகையுடன் முதல்வர் Ramp Walk! குடும்பமே வெறித்தனமான Fan போல!

விஜய்யிடம் சான்றிதழ் வாங்கிய மாணவி அவருடன் இதய வடிவத்தில் போஸ் கொடுக்க, அருகில் இருந்த உடன் வந்த பெண்மணி மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கூட்டத்தை நோக்கி கைகளை அசைத்தார்.
 Excited Woman Requests Ramp Walk with Vijay at Student Award Event
உற்சாகத்தில் பெண்மணி செய்த செயல்.. சர்பிரைஸ் ஆன விஜய்.. ரசிகையுடன் முதல்வர் Ramp Walk! குடும்பமே வெறித்தனமான Fan போல!
Published on: 
Updated on: 
2 min read

தமிழக வெற்றிக் கழகம் கடந்த 2023ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தொகுதிவாரியாக விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிகழ்வு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று அதன் இரண்டாம் கட்டம் சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு முதல்வர் விஜய் கைகளில் விருது மற்றும் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்கின்றனர்.

சில மாணவர்கள் மேடையில் தங்கள் சாதனை குறித்தும் முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்கும் மகிழ்ச்சி குறித்தும் பேசுகின்றனர். பலரும் அவர்களை அழைத்து வந்த மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சிக்காரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Vijay Students Meet
Vijay Students Meet

மாணவர்களுடன் வரும் பெற்றோரும் விழாவில் கவனம் பெற்று வருகின்றனர். அந்தவகையில் விஜய்யிடம் சான்றிதழ் வாங்கிய மாணவி அவருடன் இதய வடிவத்தில் போஸ் கொடுக்க, அருகில் இருந்த உடன் வந்த பெண்மணி மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கூட்டத்தை நோக்கி கைகளை அசைத்தார்.

 Excited Woman Requests Ramp Walk with Vijay at Student Award Event
"அய்யயோ அவர் வந்துட்டாரே.. என்னை கலாய்ப்பாரே" - விஜய் டிவி ராமர் பாணியில் 'உதயநிதியை சீண்டிய' முதல்வர் விஜய்.. வெடித்துச் சிரித்த அரங்கம்!

அவர் மகிழ்ச்சியாக சிரித்து கையசைத்ததை பார்த்து மகிழ்ந்தார் முதல்வர் விஜய். கையசைத்து முடித்து ஆனந்த கண்ணீருடன் விஜய்யிடம் வந்த அந்த பெண்மணி சில நொடிகள் பேச்சு கொடுத்தார். அவர் பேசுவதை உன்னிப்பாக கேட்ட விஜய் அவரது கைகளை குலுக்கினார்.

தொடர்ந்து மாணவியுடன் வந்த இளைஞரும் விஜய்யிடம் கைக் குலுக்கி பேசினார். இவர் பேசுவதையும் கேட்ட முதல்வர் அவரைக் கட்டியணைத்தார். தொடர்ந்து அந்த பெண்மணி விஜய்யிடம் ஏதோ செய்ய சொல்லி கேட்க, விஜய் தயங்கினார். இதைப் பார்த்ததும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ஆனந்த் உள்ளே வந்தனர்.

அந்த பெண்மணி, "பிளீஸ்" எனக் கேட்க.. விஜய் அவரது கையைப் பிடித்து ரேம்ப் வால்க் செய்வது போல சில அடிகள் நடந்தார். அதில் உற்சாகமான பெண்மணி மீண்டும் கூட்டத்தைப் பார்த்து கையசைத்து கைகளைத் தட்டினார்.

ஆனந்த கண்ணீர் பொங்க அந்த பெண்மணி மேடையை விட்டு இறங்கினார். மாணவி இறுதியாக விஜய்யின் பிரபலமான சட்டமன்ற சைகையை செய்து போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

 Excited Woman Requests Ramp Walk with Vijay at Student Award Event
``ஷாக் கொடுக்கும் சமாஜ்வாதி.. சரண்டர் ஆகாத காங்கிரஸ்.." - ராகுல், பிரியங்காவின் உத்திகள் வேலை செய்கிறதா? பரபரக்கும் உ.பி அரசியல்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.