2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் பெரும்பான்மையை நிரூபிக்க போதிய 118 இடங்கள் இல்லாததால் விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல்கள் நீடித்தது. தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு விஜய் பெரும்பான்மையான 118-க்கு அதிகமான 120 இடங்களை வென்றுள்ளார்.
இதனையடுத்து தவெக தலைவர் விஜய்க்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவில் திமுக-வில் இருந்து விலகி காங்கிரஸ், வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவுடன் விசிக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் கட்சிகள் சார்பில் ஆதரவு வழங்கியதை அடுத்து தற்போது தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் மாளிகைக்கு விஜய் சென்றார். ஆளுநர் கேரளா செல்லவிருந்த நிலையில் ஆளுநர் சந்திப்பு நிராகரிக்கப்பட்டது. அதன் பின்பு ஆளுநரின் கேரளா பயணம் ரத்தானதை தொடர்ந்து விஜய் மாலை 6.30 மணிக்கு ஆளுநரை சந்தித்தார். நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலை தொடர்ந்து விஜய்யை திங்கட்கிழமை பதவி ஏற்குமாறு ஆளுநர் மளிகை கூறியதாக செய்திகள் வெளியான நிலையில் நாளை காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டரங்கில் தவெக தலைவர் விஜய் பதவி ஏற்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் பலரும் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தவெக-விற்கு விசிக சார்பில் 2 இடங்களும், சிபிஎம் சார்பில் 2 இடங்களும், சிபிஐ சார்பில் 2 இடங்களும் கடைசி நிமிடத்தில் ஐயூஎம்எல் சார்பில் 2 இடங்களும் தரப்பட்ட நிலையில் நிபந்தனையற்ற ஆதரவு தரப்பட்டதன் நிலையில் தற்போது நாளை தவெக தலைவர் விஜய் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நாளை தவெக தலைவர் விஜய் பதவியேற்பதை முன்னிட்டு ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வருகை தரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜயுடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. மேலும், தவெக தலைவர் விஜய் பதவியேற்றதும் முதல் கையெழுத்து எதற்கு போடுவார்? என்பது பலரின் ஆர்வமிக்க கேள்வியாக இருக்கிறது. இவை அனைத்திற்கும் நாளை தவெக தலைவர் விஜய் பதவியேற்றதும் பதில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.