

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் பொதுக்குழுக் கூட்டத்தில் பேச தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் “மத்திய அரசுக்கு தான் தமிழ்நாடு வேற புதுச்சேரி வேற நமக்கு எல்லாமே ஒன்னு தான், உலகத்தில் எந்த மூலையில் நமது வகையறா இருந்தால் அவர்கள் நம் உயிர் தான் புதுச்சேரி என்றாலே, ஞாபகம் வருவது மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம், வில்லியனூர் மாதா கோவில் தான், 1977 புரட்சித்தலைவர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார் ஆனால் அதற்கு முன்பே அவர் புதுச்சேரியில் ஆட்சி அமைத்தார் புரட்சி தலைவர் நமக்கானவர் என சொன்னதே இந்த மக்கள் தான்.
தமிழ்நாடு மக்கள் மாதிரியே புதுச்சேரி மக்களும் என்னை 30 வருஷமா தங்கி புடிச்சிட்டு இருக்கீங்க, புதுச்சேரி மக்களுக்காகவும் இந்த விஜய் குரல் கொடுப்பான் என அது என் கடமை. அதனால் தான் இங்க நீங்க படுற பிரச்சனையை பத்தி பேச வந்திருக்கேன், முக்கியமாக இந்த அரசாங்கத்தை பற்றி சொல்லியே ஆகணும் இந்த அரசாங்கம் நமது திமுக அரசு போல கிடையாது வேறு ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு வரும் மக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் பாதுகாப்பு கொடுத்திருக்காங்க. இப்படிப்பட்ட புதுச்சேரி அரசாங்கத்திற்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
இதை பார்த்தாவது திமுக அரசாங்கம் கத்துகிட்ட நல்ல இருக்கும், ஆனால் அவங்க கத்துக்க மாட்டாங்க, புதுச்சேரியை ஒன்றிய அரசு கவனிக்கவில்லை என்பது மக்களுக்கு தெரியும் மாநில அந்தஸ்து கோரிக்கை மட்டும் இல்லாமல் வளர்ச்சியை கூட கவனிக்கவில்லை. புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் திறக்க இப்போது வரை எந்த முயற்சி எடுக்கல, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை, ஒரு ஐடி நிறுவனம் தொடர்வதற்கும் முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை.
புதுச்சேரியின் முக்கிய அங்கமாக இருக்கும் பகுதிகளில் எந்த வளர்ச்சியும் இல்லை, சுற்றுலாத்தலமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங் வசதியும் கழிவறை வசதியும் இல்லை, இதையெல்லாம் மேம்படுத்த வேண்டும். புதுச்சேரி மக்கள் திமுகவை நம்பாதீங்க, மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் திமுகவின் வேலை ஒன்றிய அரசு கொடுக்கும் தொகை பற்றாமல் வெளியில் கடன் வாங்குகிறது அரசு, கடன்களை குறைத்து தற்சார்பு வருவாயை ஈட்ட வழிவகை செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களை போல புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கப்பட வேண்டும், காரைக்கால் மீனவர்களின் வாழ்க்கைக்கு வழிவகை செய்ய வேண்டும்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்