“குட்டி ஸ்டோரி சொல்லி பாஜகவை விமர்சித்த விஜய்” - புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என பேச்சு… யார் அந்த அனுபவசாலிகள்?

அந்த காளை கோவமா இருந்த மாறி எனக்கு தெரியல பசியோட இருந்தது அதுக்கு தேவையானதை....
“குட்டி ஸ்டோரி சொல்லி பாஜகவை விமர்சித்த விஜய்” - புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என பேச்சு… யார் அந்த அனுபவசாலிகள்?
Published on
Updated on
2 min read

வேலூர் மாவட்டம், அகரம் சேரி அடுத்துள்ள கொல்லமங்கலம் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் குட்டி கதை சொல்லி திமுகவையும் பாஜகவையும் மறைமுகமாக தாக்கியுள்ளார். “ஒரு பெரிய ஊரு ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ஏரியா… நாலு ஜங்க்ஷன் ரோடு அங்கு ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை ஆக்ரோஷத்துடன் நின்றுகொண்டிருக்கிறது… அந்த ஊரில் இருந்த ஒரு சிலருக்கு மட்டும் தான் அந்த காளை அடங்கும்… ஆனா அங்க அவங்க யாரும் இப்போ இல்லை… இந்த நேரத்தில ஏற்கனவே அந்த காளையை அடக்கியவர்களுடன் இருந்த சிலர் எங்களுக்கு அனுபவம் இருக்கு… நாங்க அந்த காளையை அடக்குகிறோம் என செல்கிறார்கள் அந்த காளை அனைவரையும் முட்டி தள்ளிவிட்டது.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு சின்ன பையன் தனது பாக்கெட்டுகளில் கையை விட்டுக்கொண்டு நான் அந்த காளையை அடக்குறேன் முன்னாடி வந்தான்… அதுக்கு ஒரு பக்கம் ஏற்கனவே இருந்த அனுபவசாலிகள் எங்களால் முடியவில்லை நீ என்ன செய்யப்போற… அந்த காளை கிட்ட அடிவாங்காத என கூறுகிறார்கள். மறுபக்கம் சிலர் பரிதாபப்பட்டு தனியா எப்படி அந்த காளையை அடக்க போகிறார் என ஏளனமாக பேசுகிறார்கள்… ஆனால் அந்த சின்ன பையன் மெதுவா முன்னாடி வர அந்த காளையும் அவனை நோக்கி வரத்து அப்போ அந்த சின்ன பையன் அவன் பாக்கெட்ல இருந்த ரெண்டு புல்லுக்கட்டு எடுத்து கொடுக்க அந்த காளையும் அதை சாப்பிட்டு மெதுவா அவன் கூட நடக்குது…

இந்த நேரத்துல அந்த பையனை முடியாதுனு சொன்ன அனுபவசாலிகளும், ஏளனமா பேசுனா பரிதாப காரர்களும் தலையை தொங்க விட்டுட்டு அமைதியா போறாங்க… என அவங்க பேசுன பேச்சு அப்படி… இப்போ அங்க இருந்த ஒரு பெரியவர் அந்த சின்ன பையன் கிட்ட நீ எப்படி பா அந்த காளையை அமைதியக்குன என கேட்ட போது, அந்த சின்ன பையன் அந்த காளை கோவமா இருந்த மாறி எனக்கு தெரியல பசியோட இருந்தது அதுக்கு தேவையானதை கொடுத்தேன் அமைதியாகிவிட்டது என சொன்னான்.. அதற்கு அந்த பெரியவர் ஒரு விஷயத்துல அனுபவமும் புத்திசாலித்தனமும் முக்கியமில்லை அந்த நேரத்திற்கு தகுந்த மாதிரி நடக்கிறது தான் முக்கியம்” என கதையை கூறி அந்த சின்ன பையன் தான் மக்களுக்கு இப்போ தேவையானதை செய்ய வந்திருக்கும் நம்ம தமிழக வெற்றிக் கழகம்” என கூறினார்.

இந்த குட்டி கதையில் அனுபவசாலிகளாக திமுகவையும், திமுகவையும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் பரிதாபப்பட்டு தனியாக எப்படி செய்வாய் என கேட்டவர்களை மறைமுகமாக பாஜகவுடன் ஒப்பிட்டு சொல்லி இருக்கிறார். காரணம் பலமுறை தமிழிசை சௌந்தரராஜன் விஜய் தனியாக திமுகவை எதிர்க்க முடியாது என கூறிவந்தார். கதை கூறி முடித்த விஜய் இது யாருக்கு புரிய வேண்டுமோ அவர்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் என தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com