தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை காணாத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த தேர்தலின் தனித்துவத்தை உறுதி செய்தவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான். இதுவரை அதிமுக - திமுக என்ற இரண்டு பிராந்திய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த நிலை சற்று மாறியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி துவங்கிய விஜய் திமுக -எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியிலிருந்து தனது அரசியலை முன்னெடுத்தார். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது பல கட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவர் அனைத்தையும் கடந்து 2 மாநில மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறார்.
விக்ரவாண்டியில் நடத்தப்பட்ட வி சாலை மாநாடும் சரி, மதுரை பாரபத்தி மாநாடும் சரி மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்தன.
விமர்சனமும் பதிலும்..
தமிழக வெற்றி கழகம் மீது இரண்டு மிக முக்கியமான விமர்சனங்கள் இருக்கின்றன. வேறு சில விமர்சனமும் உள்ளன. ஆனால் அவை எல்லா காட்சிகளிலும் உள்ள பொதுவான விமர்சனம்தான் ஆனால்
1.விஜய் மக்களை நேரடியாக சந்திக்கவில்லை…களத்தில் நிற்கவில்லை
2. விஜய் கட்சியின் தொண்டர்கள் பக்குவப்படாமல், அரசியல்படுத்தப்படாமல் இருக்கின்றனர்
ஆகிய இரு விமர்சனங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் விஜய் எப்படி கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன் விளைவாகத்தான் விஜய் மக்கள் சந்திப்பை முன்னெடுத்திருக்கிறார்.
ஆனால் இரண்டாவது விமர்சனம் ஒரு நாளில் சரியாகும் ஒன்று அல்ல.. அவரின் ரசிகர்கள் நம்பிக்கைக்குரிய தவெக தொண்டர்களாக மாற நீண்ட நாட்கள் ஆகும்.
கடைசியாக மதுரை மாநாட்டில் பேசும்போது கூட ‘நான் மக்களை விரைவில் சந்திக்க உள்ளேன்’ என சொல்லியிருந்தார் அதன்படியே இன்று முதல் ‘வெற்றி பேரணியில் தமிழ்நாடு’ என்ற பொருண்மையில் விஜய் -ன் முதல் மக்கள் சந்திப்பு திருச்சியிலிருந்து துவங்குகிறது. அதன்படி திருச்சி மரக்கடை காந்தி சந்தை பகுதியிலிருந்து தனது பிரச்சாரத்தை விஜய் துவங்குகிறார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், பிரச்சாரத்தை துவங்க சற்று தாமதம் ஆகிறது. திருச்சி சாலை முழுக்க மக்களால் நிரம்பி வழிகிறது. விஜய் -ன் பிரச்சார வாகனம் ஊர்ந்து செல்லும் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. திருச்சி விமான நிலையத்திலிருந்தே மக்கள் கூட்டம் விஜய் -ன் பிரச்சார வாகனத்தை சூழ்ந்துள்ளனர். போக்குவரத்தை கட்டுப்படுத்தமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
விஜய்க்கு பல கெடுபிடிகளை போலீசார் விதித்துள்ளனர். அவர் எவ்வாறு இந்த சூழலை கையாளப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டே இருக்கிறது. 30 நிமிடம் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இன்னும் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.