திமுகவும் காலி அதிமுகவும் காலி.. வாகை சூடிய தவெக! அமைச்சர்களுடன் முதல்வர் செய்த சைகை!

தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில்...
Vijay TVK Bypoll Victory Celebration
Vijay TVK Bypoll Victory Celebration
Published on: 
Updated on: 
2 min read

தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன. இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக முதல்வர் விஜய் அமைச்சர்களுடன் இணைந்து ஒரே மாதிரியாகச் சைகை செய்தபடி நிற்கும் புகைப்படம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறையில் முதல்வர் விஜய் மற்றும் அவருடன் இருக்கும் அமைச்சர்களான ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுன, நிர்மல் குமார் ஆகியோர் ஒன்றிணைந்து, சட்டபேரைவில் வைரலான விஜய்யின் சைகையான கைகளை மார்புக்கு அருகே உயர்த்தி ஒரே மாதிரியான சைகையை வெளிப்படுத்தியபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம், இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தவெக தரப்பில் வெளிப்படும் அரசியல் உற்சாகத்தின் பின்னணியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் இருவரும் தவெக சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 72,103 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 59,838 வாக்குகளைப் பெற்றார். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 69,284 வாக்குகளைப் பெற்றார்.

அதேபோல், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 66,481 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 57,370 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் 45,280 வாக்குகளையும் பெற்றனர். இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றிருந்தாலும், திமுகவும் அதிமுகவும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளன. தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் வாக்கு வலிமை குறித்த விவாதமும் எழுந்துள்ளது.

விஜய்யின் அரசியல் செல்வாக்கால் திமுகவும் அதிமுகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், இரு கட்சிகளின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றுள்ளதுடன், திமுக மற்றும் அதிமுக பெற்ற வாக்குகளும் தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, இரு தொகுதிகளிலும் அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதும், திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதும் இந்த இடைத்தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில், கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். இந்த வெற்றி, புதிதாக உருவான தவெகவின் அரசியல் செல்வாக்கு மற்றும் எதிர்க்கட்சிகளின் தேர்தல் செயல்பாடு குறித்து விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com