"முதல்வரை காண வந்த கூட்டத்தில் 10 பேர் மயக்கம்" - ஒருபுறம் தங்க மோதிரம் திட்டம்.. மறுபுறம் கூட்ட நெரிசலாக மாறிய மதுரை

முதல்வர் விஜயை காண காத்திருந்த மக்கள் உட்பட கூட நெரிசலில் வெயிலில் காத்திருக்க 10 பேர் இதுவரை மயங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Newborn Gold Ring Scheme
Newborn Gold Ring Scheme
Published on: 
Updated on: 
1 min read

மதுரையில் இன்று (செப் 28) 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை' முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். ஜூன் 22 அன்று முதல் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தாய்மார்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் இந்த விழாவில் பங்கேற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் பச்சிளம் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து இந்த விழாவினை தொடங்கிவைத்தார். மேலும், குழந்தைகளை தூக்கி கொஞ்சி, முத்தமிட்டு அந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். மேலும், விருப்பப்பட்டு தங்களது குழந்தைகளுக்கு பெயர் வைக்க கூறிய தாய்மார்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அந்த குழந்தைகளுக்கு பெயரும் வைத்தார்.

பின்னர் அந்த அரங்கில் கூடியிருந்த தாய்மார்களின் குடும்பத்தினருடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், விழாவினை சிறப்பிக்க வந்த தாய்மார்களோடு குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இந்த விழாவிற்கு, வருவதற்கு முன் முதல்வர் விஜய் திறந்த வெளி வாகனத்தில் சாலையின் இருபுறத்திலும் இருந்த மக்களை பார்த்து கையசைத்தவண்ணம் வந்தார். முதல்வர் விஜயை காண காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். மேலும், முதல்வர் விஜய் வந்துகொண்டிருந்தபோது, அவரைக் காண்பதற்காக இளைஞர் இருவர் 'டிரான்ஸ்ஃபாமர்' மீது ஏறி நின்றார்.

அப்போது அதை பார்த்து அதிர்ச்சியடைந்த முதல்வர் விஜய், அந்த இலைஞரை கீழே இறங்கும்படி சைகை காட்டினார். இது ஒருபுறம் இருக்க, மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகே முதல்வர் விஜயை காண காத்திருந்த மக்கள் உட்பட வெயிலில் காத்திருந்த 10 பேர் இதுவரை மயங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சிலரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com