“விஜய்யின் பேச்சு வரவேற்கத்தக்கது..!!” அதிமுக கஜானாவை காலி செய்த போதும்…செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி..!

கால் பதிக்க இடம் கிடைக்காதா என பாஜக, ஆர் எஸ் எஸ் துடித்து கொண்டு இருக்கிறார்கள். யாரும் வழி ஏற்படுத்திவிட கூடாது. ...
selva perunthagai vs vijay
selva perunthagai vs vijay
Published on
Updated on
1 min read

விஜய் பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று சொல்லியிருப்பது வரவேற்கதக்கது. கால் பதிக்க இடம் கிடைக்காதா என பாஜக, ஆர் எஸ் எஸ் துடித்து கொண்டு இருக்கிறார்கள். யாரும் வழி  ஏற்படுத்திவிட கூடாது- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார்.

நேற்று தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக கட்சியின் முதல்வர் வேட்பாளராக தாவெக தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே கூட்டத்தில் பேசிய விஜய் “மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி, மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர் காய நினைக்கிறது பாஜக, அவர்களின் இந்த செயல் ஒரு போதும் தமிழகத்தில் வெற்றி பெறாது. பாஜகவுடன் இணைந்து போக இது அதிமுகவோ அல்லது திமுகவோ இல்லை இது தமிழக வெற்றிக் கழகம்” என பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி கட்சியினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் பாசிச பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று சொல்லியிருப்பது வரவேற்கதக்கது. கால் பதிக்க இடம் கிடைக்காதா என பாஜக, ஆர் எஸ் எஸ் துடித்து கொண்டு இருக்கிறார்கள். யாரும் வழி  ஏற்படுத்திவிட கூடாது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எத்தனை தொகுதிகள் கூட்டணி போன்ற விஷயங்களை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். தமிழகத்தில் வேறு கட்சிகள் கூட்டணிக்குள் வருவதாக இருந்தால் தமிழகத்தில் எங்களது கூட்டணிக்கு தலைமை வைக்கக்கூடிய தமிழக முதலமைச்சர் முடிவு செய்வார்”

தமிழக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவேற்றியுள்ளது. தமிழக மக்களுக்கு எது தேவையோ அதை இந்த அரசு செய்து வருகிறது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில்  நிறைவேற்றாமல் உள்ள 10% வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக கஜானாவை காலி செய்த போதும் அதனை திறமையாக தமிழக அரசு கையாண்டு வருகிறது. தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் 4000 கோடி ரூபாய் சொத்துக்களை மீட்டு எடுத்துள்ளனர். 3 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளனர். திமுக அரசின் மீது குறை செல்வதற்கு ஒன்றும் இல்லை மக்களின் நலனுக்காக வாழ்விற்காக தமிழக முதலமைச்சர் 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறார். பாஜக தொடர்ந்து தமிழக மக்களையும் தமிழக நலனையும் புறக்கணிக்கிறது என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com