தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 டிசம்பர் முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், இன்னும் வழங்கப்படாததால் விரைந்து வழங்குமாறு தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இழுபறி நீடித்து வருகிறது
இதையடுத்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மின்வாரிய நிதிப் பிரிவு இயக்குநர் சுந்தரவதனன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மின்வாரியத்தில் உள்ள 19 தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் இக்குழுவுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு
இந்த நிலையில், 19 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சென்னை அண்ணா சாலையில் உள் ளமின் வாரிய தலைமை அலுவலகத்தில் நாளை பகல் 12:00 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொழிற்சங்கங்கள் தரப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பதை ரத்து செய்துவிட்டு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்க வேண்டும்.
மின் வாரியம் மூலமாகவே தேர்வு
மின்வாரிய ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்யாமல், மின் வாரியம் மூலமாகவே தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது