“திமுக தலைமைக்கு நாங்கள் நெருக்கமாக உள்ளோம்” - மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்!!”
வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.
நேற்றைய தினம் விழுப்புரம் மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது,
“நாட்டின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு
அவருக்கு எனது வாழ்த்துகள். தனக்கு அந்த விருது கிடைக்கவில்லை என யாரும் ஆதங்கம் படக்கூடாது. நிறைய திறமையானவர்கள் அந்த வரிசையில் நிற்க வேண்டும் என தெரிவித்தார்.
மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரும் நடிகர்களை அரசியல்வாதியாக பார்க்காமல் சினிமா நடிகராக் பார்ப்பதற்கான கூட்டமாக தான் உள்ளதா, விஜய்க்கு முன்னோடியாக அரசியலுக்கு வந்த நீங்கள் இதை எப்படி பார்கிறார்கள் என்ற கேள்விக்கு
“என்னை ரசிகர்கள் ஏன் தேடி வந்ததார்கள் என்பதை ரசிகர்களிடம் தான் கேட்க வேண்டும்.
விஜயை பார்க்க வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்ற கேள்விக்கு,
“கண்டிப்பாக இந்த கூட்டம் ஓட்டாக மாறாது. அது எல்லா தலைவருக்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும், இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பொருந்தும் எனவும் கூட்டம் சேர்ந்து விட்டால் அது எல்லாம் ஓட்டாக மாற வாய்ப்பில்லை” எனவும் தெரிவித்தார்.
இன்று மாலை நாட்டு மக்கள் இடையே பிரதமர் பேச உள்ளார் என்ற கேள்விக்கு
“பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே என்ன பேச போகிறார் என நாட்டு மக்களில் ஒருவனாக நானும் அதனை கேட்க உள்ளேன்” என தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு என்ன ஆலோசனை கூற விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு
“நல்ல பாதையில் செல்ல வேண்டும், தைரியமாக முன்னேறுங்கள், மக்களுக்காக செய்யுங்கள், எல்லா அரசியல்வாதிகளுக்கும் வைக்கக்கூடிய வேண்டுகோள் தான் இது.”
சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளளை மக்கள் நீதி மய்யம் தொடங்கி விட்டதா என்ற கேள்விக்கு,
“அதன் வளைவாக தான் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் இரட்டை இலக்கு தொகுதிகள் கேட்கிறார்கள் உங்கள் எதிர்பார்ப்பு என்ன? என்ற கேள்விக்கு
“எங்களுடைய எதிர்பார்ப்பை உங்களிடம் கூறுவேனா, திமுகவின் தலைமைக்கு நாங்கள் நெருக்கமாக உள்ளோம். அன்பாக இருக்கிறார்கள். கண்ணியமாக இருக்கிறார்கள். 75 ஆண்டுகாலம் கட்சி எல்லா உரிமையும் தட்டி கேட்டு விட முடியாது. அவர்களின் செயல்பாடுகளை தட்டிக் கேட்கக்கூடிய உரிமையை எல்லா மக்களுக்கும் கொடுத்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
அதில் ஒருவனாக நான் கேட்கிறேன் இது கொடுங்கள் அது கொடுங்கள் என 75 வருடம் கட்சியை எப்படி கேட்க முடியும்? எங்கள் தகுதியை நிரூபித்துக் கொண்டு, இதை கொடுங்கள் என கேட்பதுதான் நியாயமாக இருக்கும்” என தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.