“விஜய்-க்கு வாக்களித்து தவறு செய்து விட்டோம்” - சாட்டையால் அடித்துக்கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! கடன் தள்ளுபடி மறு அறிவிப்பு ஏமாற்று வேலையா?

வாக்களித்து தவறு செய்து விட்டோம் என்ற காரணத்திற்காக தங்களுக்கு தாங்களே தண்டனை கொடுத்துக் கொள்ளும் வகையில்..
farmers protest in salem
Published on
Updated on
2 min read

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மண்டியிட்டு தங்களை தாங்களே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகம் அரசு கடந்த மாதம் 25ம் தேதி விவசாய பயிர் கடன் தள்ளுபடி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் ரூபாய் 50,000 வரை பெற்ற சிறு குறு விவசாயிகளுக்கு மட்டும் 100 சதவீதம் கடன் தள்ளுபடி  என்றும் ரூபாய் 50,001 மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு பகுதி அளவை பொறுத்து தள்ளுபடி சதவீதம் உள்ளத்தக்க அறிவித்தாது. அதையடுத்து தமிழக அரசை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடந்தி வருகின்றனர். அதனையடுத்து ரூபாய் 75,000 வரை பெற்றவர்களுக்கு முழு கடன் தள்ளுபடி என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தேர்தல் பிரசாத்தின் போதும் வாக்குறுதிகளில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அது சிறு குறு விவசாயிகள் முற்றிலும் மாறுபட்ட கணக்கில் வழங்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசை கண்டித்து தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது விவசாயிகள் சிலர் கூட்டுறவு பயிர் கடனை தமிழ்நாடு அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர். பிறகு கூட்டத்தை பாதியிலேயே புறக்கணித்து வெளியே வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதலமைச்சரின் அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்திலேயே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்து தவறு செய்து விட்டோம் என்ற காரணத்திற்காக தங்களுக்கு தாங்களே தண்டனை கொடுத்துக் கொள்ளும் வகையில் விவசாயிகள் தங்களை தாங்களே சாட்டையால் அடித்துக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யின் மறு அறிவிப்பு வெறும் ஏமாற்று வேலை என்றும், தேர்தல் நேரத்தில் அவர் என்ன வாக்குறுதி கொடுத்தாரோ அதை அப்படியே நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். விவசாயிகள் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடன் தள்ளுபடி கேட்டு விவசாயிகள் போராட்டம் தெடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும் 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com