
பாட்டாளி மக்கள் கட்சியில் யாருக்கு அதிகாரம். மாறி மாறி வெளியிடப்படும் அறிக்கையால் நீடிக்கும் குழப்பம். பொருளாளர் திலகபாமா பதவியில் நீடிப்பாரா? இன்று சோழிங்கநல்லூர் சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள தலைவர் அன்புமணி, கட்சியின் உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கி வரும் நிலையில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு அன்புமணி அழைப்பு விடுத்த 23 மாவட்ட செயலாளர்களில் 22 பெரும் கூட்டத்திற்கு வருகை தந்து அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். கூட்டத்திற்கு வராமல் விடுபட்ட ஒரு மாவட்ட செயலாளரும் சொந்த சிக்கலால் கூட்டத்திற்கு வர முடியவில்லை என தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் கட்சியின் பொருளாளர் பதவியில் இருக்கும் திலகபாமாவை, கட்சியின் பதவியில் இருந்து நீக்குவதாகவும் பொருளாளர் பதவியில் சையது உசேன் மன்சூரை நியமிப்பதாகவும் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதற்கு அன்புமணி தொடர்ந்து திலகபாமாவே பொருளாளராக நீடிப்பார் என கூறியுள்ளார். மேலும் கட்சியில் அன்புமணிக்கு ஆதரவாக இருக்கும் சில மாவட்ட செயலாளர்களையும் கட்சியைவிட்டு நீங்குவதாக ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து பதிலளித்த அன்புமணி இதை பற்றிய தெளிவான அறிக்கை கட்சியின் சார்பாக விரைவில் தெளிவாக வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். பொதுக்குழு கூடி அதிகாரப்பூர்வமாகவே தான் கட்சியின் தலைவராக இருப்பதாகவும் கட்சியின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தனக்கே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்புமணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிறுவனர் ராமதாஸ் கட்சியின் எந்த ஒரு முடிவாக இருந்தாலும், பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் தன்னிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்று தெரிவித்து வருகிறார். இருவருக்கும் இடையில் கட்சியின் தொண்டர்கள் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்