கடந்த ஆண்டு மார்ச்சில் தமிழக பா.ஜ.க. தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கில் வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளவும், கட்சியை பலப்படுத்தவும், தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு, தேசிய தலைமை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் முருகன் நேற்று, மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.