

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தனித் தொகுதிகளான இந்த இரண்டு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், அக்டோபர் 9-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த இடைத்தேர்தல் அறிவிப்பால் மீண்டும் தமிழகம் தேர்தல் களம் பூண்டுள்ளது. அனைத்து கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது. வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி என அடுத்தடுத்த பணிகளை தொடங்கியுள்ளனர். அந்த இரு தொகுதியிலும் அதிமுக சார்பில் வெற்றி பெற்று ராஜினாமா செய்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா இருவரும் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்து கொண்டனர். அதனையடுத்து ராஜினாமா செய்தவர்களுக்கே தவெக சார்பில் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் யாருக்கு சீட் கொடுப்பது போன்ற குழப்பநிலை நிலவி வந்த நிலையில் தற்போது இரண்டு பெண் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு, அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிவித்துள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணிதா சம்பத்-திற்கு மதுராந்தகம் தொகுதியிலும், திருப்பூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பானுமதி அவர்களுக்கு தாராபுரம் தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர் கணித சம்பத் 2011ம் ஆண்டு மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்தலில் 79,256 வாக்குகள் பெற்று எதிர்த்து நின்ற சுமார் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவின் வேட்பாளர் இந்த கணக்கு வெற்றியை பெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்