

திருச்சி கிழக்கு தொகுதியில் வரவிருக்கின்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இருந்து நடிகை திரிஷா அல்லது தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியை களம் காண செய்யப்போவதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தேர்தல்:
2026 சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை பிடித்து ஆட்சி பொறுப்பில் தவெக அமர்ந்தது. மேலும், தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கிலும், பெரம்பூரில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, பெரம்பூர் தொகுதியை தக்கவைத்து கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்தார். மேலும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாராபுரத்தை சேர்ந்த சத்யபாமா மற்றும் மதுராந்தகத்தை சேந்த மரகதம் குமரவேல் ஆகிய இருவரும் தங்களது MLA பதவியினை ராஜினாமா செய்துவிட்டு அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்தனர். அதன் பின்னர், இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி 6 அக்டோபர் அன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் இருவரும் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
மொத்தம் 7 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு அடுத்தடுத்த தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, திருச்சி கிழக்கு என்பது ஆரம்பத்தில் இருந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது என்றுதான் கூறவேண்டும். தவெக சார்பில் தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்த நிலையில் அடுத்து இந்த தொகுதிக்கு தவெக-வின் முகமாக நிற்க வைக்கப்போவது யாரை? என்ற கேள்விகள் மக்கள் மனதில் அடுத்தடுத்து எழுந்து கொண்டே இருக்கிறது. இதனாலேயே இது முக்கியமான தொகுதியாக பரக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை இவரா இருக்குமோ?:
அதன் அடிப்படையில், திருச்சி கிழக்கில் தவெக சார்பில் நிற்க போவதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் அந்த பெயர்கள்தான் ஜான் ஆரோக்கிய சாமி மற்றும் நடிகை திரிஷா. ஜான் ஆரோக்கிய சாமி தவெக-வின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். இவர், தேர்தல் சமயத்தில் தவெக-விற்கு வியூகங்கள் வகுப்பது, பிரச்சாரம், தேர்தல் ஒருங்கிணைப்பு என இவரது பங்களிப்பு என்பது பெரிதும் பேசப்பட்டது. இவரை அடுத்து நடிகை திரிஷாவும் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளதாக பேசப்படுவதும் விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலை பொறுத்தவரை சினிமாவும் கூட சில சமயங்களில் முக்கிய பங்காற்றியுள்ளது. அதை மெய்ப்பிக்கும்பொருட்டு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் ஆகியோர் அரசியலில் வெற்றியும் கண்டுள்ளனர்.
அப்படி இருக்க நடிகை திரிஷாவும் சினிமாவை சேர்ந்தவர் என்பதால், ஒருவேளை அவரும் கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதற்கான சினிமாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் வெற்றிபெறுவர்கள் என்று உறுதியாகவும் கூறமுடியாது. மேலும், நடிகை திரிஷாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு செல்வாக்கும் இருக்கிறது. தனக்கே ஒரு ரசிகர் கூட்டம் வைத்திருப்பதால் இந்த இடம் சற்றே யோசிக்கவேண்டிய இடமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இடைத்தேர்தல் களம்:
இடைத்தேர்தல் களம் என்பது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இருவரும் தங்களது பலத்தினை சோதித்து பார்க்கும் ஒரு களமாகவே அமைகிறது. அப்படி இருக்க இடைத்தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக திருச்சி கிழக்கு மக்களால் பார்க்கப்பட்டுவரும் நிலையில், கட்டாயம் அங்கும் 4 முனை போட்டி அமைவதற்கான வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, தவெக தனது செல்வாக்கினை நிலைநிறுத்த வேண்டும், திமுக தனது அரசியல் அடித்தளத்தினை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும். எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தினையும் விட்டுவிடாமல் அதே சமயம் ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை பயன்படுத்தி மீண்டும் தங்களது பலத்தினை நிரூபிக்கவேண்டும். அதிமுக சார்பில் தங்களது வாக்கு வங்கியை தக்கவைத்து கொள்ளவேண்டும், நாதக சார்பில் மாற்று அரசியலை எப்படியாவது மக்களுக்கு தரவேண்டும் என்ற பல்வேறு பொறுப்புகளை சுமந்துள்ளதால் இடைதேர்தல் ஒரு பரபரப்பான களமாகவே இருக்கும்.
வெற்றி வாய்ப்பை தக்கவைக்குமா தவெக?:
தவெக-வின் முகமாக தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமி மற்றும் நடிகை திரிஷா ஆகிய இருவரில் ஒருவரை தவெக சார்பில் நிற்க வைக்கப்போவதாக வலம் வரும் இந்த தகவல் படி பார்த்தால், கடுமையாக தேர்தல் களமாகவே மற்ற கட்சியினருக்கு இது அமையும் என்று கூறப்படுகிறது. எதிர்ப்புகள் இருந்தாலும் நடிகை திரிஷாவை நிற்கவைத்தால் அவரது ரசிகர்களின் செல்வாக்கினை கொண்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படியோ தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் இந்த தவெக வேட்பாளர்கள் குறித்த கருத்துக்கள் உண்மையாகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.