

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தளி தொகுதி, கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஒரு தனித்துவமான களமாகும். மலைவளம் மற்றும் விவசாயம் நிறைந்த இந்தத் தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (திமுக கூட்டணி) நீண்ட காலமாக வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளது.
தளி தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 36 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 34.5 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக ஒக்கலிக கவுண்டர்கள் 26 சதவீதத்தோடு பெரும்பான்மையாக உள்ளனர். நாயுடுக்கள் 22 சதவீதமும், ரெட்டியார்கள் 14 சதவீதமும், முஸ்லிம்கள் 10 சதவீதமும் உள்ளனர். 87 சதவீத கிராமப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், கன்னடம் பேசும் மக்களின் வாக்குகள் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.
முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகத் தளி கர்நாடகாவால் சூழப்பட்ட தமிழகப் பகுதி என்பதால், தமிழகத்தின் மற்ற பகுதிகளுடன் சாலை இணைப்பு குறைவாக இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. எல்லை தாண்டிய கடத்தல்கள் மற்றும் வனவிலங்கு வேட்டை நடப்பது மக்களின் பெரும் அச்சமாக உள்ளது. தளி செஞ்சாந்து சாகுபடிக்குப் பிரசித்தி பெற்றிருந்தாலும், அதற்கு முறையான சந்தை வசதி இல்லை என்பதும், வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் பெங்களூரு மற்றும் ஓசூருக்குப் புலம் பெயருவதும் பிரதான குறைகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
தளி தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக கூட்டணி (CPI) 62.1 சதவீத வாக்குகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியது. 2024-ல் இது 40.2 சதவீதமாகப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அதிமுக 2021-ல் 33.1 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 48.9 சதவீதமாகத் தனது செல்வாக்கை அதிரடியாக உயர்த்தியுள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 145 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 101 ஆகக் குறைந்துள்ளது. அதிமுக 2021-ல் 107 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 131 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 29 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.
2026 தேர்தல் கணிப்பின்படி, தளியில் திமுக கூட்டணி 125 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. அதிமுக 95 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 45 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 32 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக கூட்டணி 39 சதவீத வாக்குகளைப் பெற்று கம்பர்ட்டபிளாக முன்னிலை வகிக்கிறது. தவெக தாக்கம் இங்கு மிகக் குறைவாகவே இருக்கும். வெற்றி வித்தியாசம் சுமார் 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.