குன்னம் தொகுதி யாருக்கு? மும்முனைப் போட்டியில் யாருக்கு லாபம்? - கருத்துக்கணிப்பு முடிவுகள்

திமுக 33 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 25 சதவீத வாக்குகளை
kunnam constituency
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் தொகுதி, முழுக்க முழுக்க விவசாயத்தைச் சார்ந்த ஒரு தொகுதியாகும். தற்போதைய அமைச்சராக இருக்கும் எஸ்.எஸ். சிவசங்கரின் செல்வாக்கு இந்தத் தொகுதியில் வலுவாக இருந்தாலும், சாதி ரீதியான சமன்பாடுகள் மற்றும் கூட்டணியின் பலம் இந்த முறை பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் எனத் தெரிகிறது.

குன்னம் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 35 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 30 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக வன்னியர்கள் 31 சதவீதத்தோடு பெரும்பான்மையாக உள்ளனர். ஆதிதிராவிடர்கள் 20 சதவீதமும், உடையார்கள் 6 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 7 சதவீதமும் உள்ளனர். 96 சதவீத கிராமப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், மக்காச்சோள விவசாயிகளின் வாக்குகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்றன.

Kunnam constituency

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகத் தொழிற்சாலைகள் இல்லாததால் கூலித் தொழிலாளர்கள் இடம் பெயருவது பெரும் குறையாக உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு, மக்காச்சோள விவசாயிகளுக்குப் படைப்புழுத் தாக்குதலால் ஏற்படும் நஷ்டம் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு போன்றவை மக்களின் பிரதான புகார்களாக உள்ளன. கால்நடைத் தீவன விலையேற்றத்தால் பால் உற்பத்திப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.

குன்னம் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 47.4 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 40.6 சதவீதமாகப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அதிமுக 2021-ல் 44.5 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 49.9 சதவீதமாகத் தனது செல்வாக்கை அதிரடியாக உயர்த்தியுள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 160 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 135 ஆகக் குறைந்துள்ளது. அதிமுக 2021-ல் 101 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 98 பூத்களாக நீடிக்கிறது. சுமார் 32 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, குன்னத்தில் அதிமுக 125 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. திமுக 110 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 100 வாக்குச்சாவடிகள் ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 36 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடிக்கும் எனத் தெரிகிறது. திமுக 33 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 25 சதவீத வாக்குகளைப் பெறும். வெற்றி வித்தியாசம் சுமார் 3 சதவீதமாக மட்டுமே இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com