

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த காளவாக்கம் பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் நிகழ்ச்சிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு தொடங்கிவைத்தார். அதற்கு முன்பு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தினகரன் பத்திரிகை செய்தியாளர் “பெரியார் அண்ணா கலைஞர் உள்ளிட்ட தலைவர்களுடன் பயணித்த நீங்கள் தற்போது இரண்டு வயது குழந்தையான விஜயுடன் பயணிக்க முடிவெடுத்துள்ளேன்” என்று கேட்ட கேள்விக்கு “பெரியாரை நெஞ்சில் வைத்து போதிப்பவன் நான் அண்ணாவின் ராஜ்யசபா பேச்சுக்களை நித்தமும் கேட்டு இருப்பேன்.
ஆனால் திமுக நான் கூலிப்படைகளை வைத்து கொலை செய்ய முயற்சி செய்தேன் என என் மீது பழி போட்டனர். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளரை பார்த்து எதிர்வினையாக கேள்வி கேட்டார். “உங்களுக்கு எப்படி கேள்வி கேட்கும் உரிமை உள்ளதோ அதேபோன்று எனக்கும் உள்ளது நான் கேட்கும் கேள்விக்கு பதில் கூறுங்கள்” என்றும் “பெரிய பெரிய தலைவர்களுடன் அரசியல் செய்து விட்டு தற்போது சின்ன குழந்தை கூட அரசியல் பயணிக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது” என்றும் விஜய் உடனான கூட்டணி குறித்து பதிலளித்தார். மேலும் “சின்ன குழந்தை இல்லை.. அவர் கலை உலகில் சாதித்து விட்டு வந்திருக்கிறார். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடந்த போ இரவோடு இரவாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்றவர் விஜய். மக்கள் இயக்கமாக இருந்து 30 ஆண்டுகளாக மக்கள் பணி செய்தவர் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.
"இத்தனை ஆண்டுகளாக திமுக கூட்டணியில் பயணித்து விட்டு எப்போது திமுக பற்றி குறை கூறுவது ஏன்” என்ற செய்தியாளரின் கேள்விக்கு ஆவேசமான வைகோ “இத்தனை ஆண்டு காலமாக திமுக கூட்டணியில் இருந்தோம் மறுக்கவில்லை கூட்டணி தர்மத்திற்காக பேசவில்லை. தற்போது கூட்டணியில் இருந்து வெளிவந்து விட்டு அதனால் பேசுகிறோம்” என்று கூறினார். தினகரன் நாளிதழ் ஒரு மஞ்ச பத்திரிக்கை நீங்க மஞ்சள் பத்திரிகையா மஞ்சள் பத்திரிக்கை சேர்ந்தவரா என செய்தியாளரை பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களை எதிர்த்து குரல் கொடுத்தது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. கட்சி நிர்வாகிகளிடம் இருந்து செய்தியாளர்களை பாதுகாக்கும் விதமாக காவல்துறையினர் செயல்பட்டு செய்தியாளர்களை அப்புறப்படுத்தினர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.