``கேக் ஊட்டும் முதலமைச்சர் ஏன் செஞ்சி வரவில்லை?.. 35 நாட்கள் ஆகியும் 'கடத்தல் வழக்கு' பதியவில்லையா?" -காட்டமாக கேட்ட கனிமொழி!

பேனர், கொடிகளுமாய் ஊர் முழுக்க மாவட்டச் செயலாளர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் செலிபிரேஷனில் இருக்கிறாரே தவிர குழந்தையை கண்டுபிடிக்க எந்தவித முயற்சியும் சரியான முயற்சியாக செய்வது இல்லை.
"Why Hasn't a Kidnapping Case Been Filed After 35 Days? Cowardly CM Missing!" - Kanimozhi Slams Government
``கேக் ஊட்டும் முதலமைச்சர் ஏன் செஞ்சி வரவில்லை?.. 35 நாட்கள் ஆகியும் 'கடத்தல் வழக்கு' பதியவில்லையா?" -காட்டமாக கேட்ட கனிமொழி!
Published on: 
Updated on: 
2 min read

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காணாமல் போன குழந்தையை 34 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாதது மாநிலம் முழுவதும் பேசு பொருளாக எழுந்துள்ளது.

இந்த நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2வது வகுப்பில் படிக்கக்கூடிய 7 வயது சிறுமி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாள் காலையிலிருந்து காணவில்லை. அந்த குழந்தை காணாமல் போய் இன்றுவரை கிட்டத்தட்ட 35 நாட்கள் ஆகிறது. ஆனால் அந்த குழந்தையை கண்டுபிடிப்பதற்கு இந்த அரசாங்கம் உண்மையாகவே எதையும் செய்ததாக தெரியவில்லை." எனக் குற்றம்சாட்டினார்.

கடத்தல் வழக்கு ஏன் பதியவில்லை?

மேலும், "குழந்தையை காணோம் என்று சொன்னவுடன் புகார் அளித்திருக்கிறார்கள். அங்கு இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரிகளும் அதை விசாரிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

எனக்கு இருக்கக்கூடிய ஒரு கேள்வி, மிகத் தெளிவாக உச்சநீதிமன்றத்தில் 2013 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் தொடுத்த வழக்கில் தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், ஒரு குழந்தை காணவில்லை என்றால் அந்த குழந்தையை மிஸ்ஸிங் என எப் ஐ ஆர் (FIR) ரிஜிஸ்டர் பண்ணக்கூடாது.

24 மணி நேரத்திற்குள் அந்த குழந்தை கிடைக்காவிட்டால் கிட்நாப் அல்லது டிராஃபிக்கிங் என்றுதான் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். ஏன் மிஸ்ஸிங் என ரெஜிஸ்டர் பண்ணி இருக்கிறார்கள் என தெரியவில்லை. இதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் குழந்தைகள் நலத்துறை காவல்துறை இரண்டையும் கையில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் விஜய் இருக்கிறார்." எனக் கேள்வி எழுப்பினார்.

"கேக் ஊட்டும் முதலமைச்சர் ஏன் வரவில்லை?"

இவரே குழந்தைகளை பார்த்துதான் நண்பா, நண்பி என்று சொல்லி, அந்த குழந்தைகளிடம் கேட்டு, அந்த குழந்தைகளை வீட்டில் போய் அடம்படிகள் என்றும் சொல்லித்தான் ஓட்டு வாங்கி இந்த பதவியில் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

நேற்று குழந்தைகளுக்கு கேக் ஊட்டி கொண்டிருக்கிறார்கள் முதலமைச்சர். குழந்தைகளுக்கு கேக் ஊட்ட போகிற முதலமைச்சர் இந்த வீட்டுக்கு வந்து அந்த பெற்றோருக்கு ஒரு வார்த்தை ஆறுதல் சொல்லி இருக்கலாம்.

அவர் வரவில்லை என்றாலும் இங்கு இருக்கக்கூடிய பொறுப்பு அமைச்சராவது வந்து நாங்கள் நிச்சயமாக கண்டுபிடித்து விடுவோம் என்று ஆறுதலாக இரண்டு வார்த்தை சொல்லியிருக்கலாம்.

நாங்கள் வரக்கூடிய வழியில் பார்க்கிறோம் பேனர், கொடிகளுமாய் ஊர் முழுக்க மாவட்டச் செயலாளர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் செலிபிரேஷனில் இருக்கிறாரே தவிர குழந்தையை கண்டுபிடிக்க எந்தவித முயற்சியும் சரியான முயற்சியாக செய்வது இல்லை. 35 நாட்கள் ஆகிவிட்டது எந்தவித சரியான நடவடிக்கையும் இதுவரை இல்லை.

பெற்றோருக்கு எந்த விதமாகவும் ஆறுதலாக, நம்பிக்கை தரக்கூடிய எந்த தகவலும் இல்லை. இங்கே மட்டுமல்ல இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எத்தனையோ குழந்தைகள் காணாமல் போய் இருக்கிறார்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன, கடலூரில் சில குழந்தைகள் ஒரே நேரத்தில் காணாமல் போன அவலம் நடந்தேறி இருக்கிறது.

கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள், வேலைக்கு போகக்கூடிய பெண்கள், ஒரு குழந்தையும் ஒரு அம்மாவும் காணோம்... எதைப்பற்றியும் கவலைப்படாமல் இந்த ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் யார் வீட்டுக்கும் போய் ஒரு ஆறுதல் வார்த்தை சொல்ல கூட தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள்." என விமர்சித்தார்.

மேலும், "முதலமைச்சரே தன்னுடைய பாதுகாப்பை பற்றி பயப்படக்கூடிய நிலைதான் இருக்கிறது. நேற்று அவருடைய கொளத்தூர் அவருடைய ரசிகர் வந்தபோது கூட அவரது ரசிக்கரைப் பார்த்து பயந்து விட்டார்.

அப்படித்தான் அவர்கள் ஆட்சி நடத்தி்க் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அலங்கோலமான ஆட்சியில் யாரைக் கேட்டு ஆட்சி பொறுப்பு உகந்தார்களோ அந்த குழந்தைகளுக்கு கூட ஒரு பாதுகாப்பு தர முடியாத தரமில்லாத ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் ஒரு முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறையை பயன்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு இவர்கள் பொறுப்பில்லாமல் தன்னுடைய பாதுகாப்புக்கும் தனக்கான தேவைகளுக்காக மட்டுமே அரசாங்கத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை தாண்டி குற்றம் நடந்த பிறகாவது அந்த குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து அந்த குழந்தைகளை மீட்டெடுப்பதற்கான காணாமல் போன பெண்களை மீட்பதற்கான வழிவகையை கண்டறிய வேண்டும். அதையும் செய்யாமல் யாருக்கும் நம்பிக்கை இல்லாத ஒரு நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். " என்றார்.

"Why Hasn't a Kidnapping Case Been Filed After 35 Days? Cowardly CM Missing!" - Kanimozhi Slams Government
``காவிரியை தாரைவார்க்க போகிறார்களா? கோழை விஜய்.. கூட்டணிக்காக உரிமையில் சமரசம்?" -கர்நாடகா முதல்வரின் பேச்சுக்கு கொதித்தெழுந்த திமுக!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.