ஜோலார்பேட்டையில் அதிமுகவின் பழைய செல்வாக்கு திரும்புமா? திமுக - அதிமுக இடையே நேருக்கு நேர் மோதல்!

2026-ல் அதிமுக 35 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் எனத் தெரிகிறது
jolarpet constituency
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தின் முக்கிய ரயில்வே சந்திப்பான ஜோலார்பேட்டை, எப்போதும் ஒரு அனல் பறக்கும் தேர்தல் களமாகும். தற்போதைய திமுக எம்எல்ஏ தேவராஜ் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி ஆகியோருக்கு இடையேயான செல்வாக்குப் போட்டி இந்தத் தொகுதியின் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.

ஜோலார்பேட்டை தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 35.7 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 32.5 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக நாயுடு சமுதாயத்தினர் 28 சதவீதத்தோடு பெரும்பான்மையாக உள்ளனர். வன்னியர்கள் 18 சதவீதமும், முதலியார்கள் 16 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 15 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 5 சதவீதமும் உள்ளனர். 77 சதவீத கிராமப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், விவசாய மற்றும் ரயில்வே தொழிலாளர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

jolarpet constituency

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக ரயில்வே சந்திப்பு இருந்தும் புதிய வேலைவாய்ப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாலாறு நீர் முறையாகப் பயன்படுத்தப்படாததால் விவசாய நீர்ப்பாசனப் பற்றாக்குறை நிலவுகிறது. நவீன கால்நடைச் சந்தை இல்லாமை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் குறைவாக இருப்பது மக்களின் பெரும் குறையாக உள்ளது. சிறு கிராமங்களுக்குப் பேருந்து வசதி குறைவாக இருப்பதும் ஜோலார்பேட்டை மக்களின் பிரதான புகாராகும்.

ஜோலார்பேட்டை தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் முடிவுகளின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 45.9 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 43.9 சதவீதமாகச் சற்றே சரிந்துள்ளது. அதிமுக 2021-ல் 45.3 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 44.4 சதவீதமாகச் சற்றே குறைந்துள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 101 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 125 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 95 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 76 பூத்களாகக் குறைந்துள்ளது. சுமார் 23 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, ஜோலார்பேட்டையில் அதிமுக 115 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. திமுக 95 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 30 வாக்குச்சாவடிகள் ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 35 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் எனத் தெரிகிறது. திமுக 33 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 27 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 2 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பதால், கடும் போட்டி நிலவுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com