மடத்துக்குளம்.. கொங்கு மண்டலத்தில் தடம் பதிக்கும் விஜய்? அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பறிக்குமா தவெக? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் பரபரப்பு ரிப்போர்ட்!

இரு கட்சிகளுக்கும் இடையே வெறும் 1% மட்டுமே வித்தியாசம் இருக்கும்
madathukulam constituency
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் மடத்துக்குளம் தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே விரிவாகத் தரப்பட்டுள்ளன.

வாக்காளர் விவரம் மற்றும் சமூகக் காரணிகள்:

மடத்துக்குளம் தொகுதியில் 18 முதல் 25 வயதுடைய இளைய தலைமுறை வாக்காளர்கள் 10.5% ஆக உள்ளனர். பெண் வாக்காளர்கள் 51.9% ஆக உள்ளனர். சமூக ரீதியாக, திருப்பூர் மாவட்டத்தின் பிற தொகுதிகளைப் போலவே வெள்ளாள கவுண்டர்கள் மற்றும் அருந்ததியர் சமூகத்தினர் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். இது ஒரு வளமையான விவசாயப் பகுதியாகும். வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ரீதியாக மக்கள் ஓரளவுக்கு நிறைவான நிலையில் உள்ளனர்.

உள்ளூர் பிரச்சனைகள்:

இங்குள்ள காகித ஆலைகள் மற்றும் இதர தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் காற்று மற்றும் நீர் மாசு ஒரு மிகப்பெரிய சுற்றுப்புறச் சூழல் பிரச்சனையாக உள்ளது. பழுதடைந்த கிராமப்புற சாலைகள் மற்றும் கோடை காலங்களில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஆகியவை மக்களின் அன்றாடக் குறைகளாக உள்ளன. காய்கறி விவசாயிகளுக்கு முறையான கொள்முதல் நிலையங்கள் இல்லாதது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது.

மடத்துக்குளம் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் முடிவுகள் ஒப்பீடு (2021 vs 2024):

2021-ல் அதிமுக 46.6% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 54% வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றது. அதிமுக 39.1% ஆகக் குறைந்துள்ளது. நாம் தமிழர் கட்சி 5.11% வாக்குகளைப் பெற்றுள்ளது.

2026 தேர்தல் கணிப்பு - பூத் லெவல் ஆய்வு:

2024-ல் திமுக 123 பூத்களில் வலுவாக உள்ளது. அதிமுக 103 பூத்களில் ஸ்ட்ராங்காக இருக்கிறது. வரும் 2026 தேர்தலில், அதிமுக 120 பூத்களிலும், திமுக 105 பூத்களிலும் முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது. சுமார் 90 பூத்கள் ஸ்விங் பூத்களாக இருப்பதால், இங்குப் போட்டி மிகவும் தீவிரமாக இருக்கும்.

கான்சிலிடிக்ஸ் கணிப்பின்படி, வரும் தேர்தலில் அதிமுக 36% வாக்குகளையும், திமுக 35% வாக்குகளையும் பெறும். இரு கட்சிகளுக்கும் இடையே வெறும் 1% மட்டுமே வித்தியாசம் இருக்கும். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 24% வாக்குகளைப் பிரிக்கும். விஜய்யின் கட்சி பிரிக்கும் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பதம் பார்க்கும் என்பதால், அதிமுக இத்தொகுதியில் மிகக் கடினமான போட்டியைச் சந்திக்க நேரிடும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com