
2026 தேர்தல் உண்மையில் இன்னும் 10 மாதங்களுக்கு தமிழ் நாடு அல்லோலப்படும் என்பதில் ஐயமில்லை. “எதிரிக்கு எதிரி நண்பன்" என்பது போல விஜயுடன் கூட்டணி வைக்கவே எடப்பாடி விரும்பினார். ஆனால் விஜய் இதற்கு இசைந்து கொடுப்பதாக தெரியவில்லை எனவே வேறு வழி இல்லாமல் பாஜக -வுடன் கூட்டணி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணிக்கான விலைதான் “அண்ணாமலை பதவி விலகளுக்கு” காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் எதுவுமே இல்லாத பாஜக -விற்கு அதிமுக -வின் கூட்டணி கிடைத்ததே பெரும் லாபம் தான். ஆனால் அதிமுக விற்கு அது பேரழிவு என்கின்றனர் ஆர்வலர் பலர்.
பலமுறை பேசிய உள்துறை அமித்ஷா கூட தமிழகத்தில் அதிமுக - பாஜக தலைமையிலான ஆட்சிதான் அமையும் என கூறியுள்ளார். இதன் மூலம் அதிமுக -வை விழுங்கபார்க்கிறது பாஜக என்ற கூற்று ஊர்ஜிதமாகியுள்ளது. அவ்வப்போது தமிழக பாஜக தலைவர்கள் கூட கூட்டணி ஆட்சிதான் என்று பேசி வருகின்றனர். இந்தநிலையில் “அதிமுக - வை பாஜக கபளீகரம் செய்துவிடும்” என திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்கும் வகையில் “விசிக -வை -வை திமுக விழுங்கிவிடும் என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி அப்போது பேசிய அவர்,
அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்கிற கருத்தை அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நல்லெண்னத்தோடு சுட்டிக் காட்டினேன். விசிகவை திமுக விழுங்கிவிடும் என்கிற எடப்பாடி பழனிசாமியின் கருத்து அவருக்கு யாரோ சொல்லிக் கொடுத்து பேசுவதாகவே நான் நினைக்கிறேன். எடப்பாடி பழனிசாமி தானாக இதனை பேசுகிறார் என நான் ஏற்க முடியவில்லை.
அதிமுகவிற்காவிற்கு எதிராக நான் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அதிமுக தொண்டர்கள் நான் எதற்காக கூறுகிறேன் என்பதை உணர்வார்கள். எடப்பாடி பழனிசாமியும் இதனை உணர்வார். ஆனால், சேராத இடங்களில் சேர்ந்திருக்கும் சூழலில் அவர் இப்படியெல்லாம் பேசுவதாகவே நான் கருதுகிறேன். அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை.
2001 ஆம் ஆண்டு முதல் விசிக ஓரிரு பொதுத்தேர்தல்களை தவிர தொடர்ந்து திமுக கூட்டணியில்தான் பயணிக்கிறது. மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து மாநில கட்சியாக விசிக அங்கீகாரம் பெற்றுள்ளது. விசிக வளர்ச்சியடைந்துள்ளதே தவிர வீழ்ச்சியடையவில்லை. எடப்பாடி பழனிசாமி திரித்து பேசுவதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.
திமுக கூட்டணியில் இருப்பதால்தான் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற கூடாது என்று நான் சொல்லவில்லை, திமுக கூட்டணியில் விசிக இருக்க வேண்டும் என்பதற்காகவும் சொல்லவில்லை. திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜகவின் கொள்கைகளை விசிக தொடர்ந்து எதிர்க்கும்.
சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரானவர்கள், சாதி மதத்தின் பெயரால் மக்களை பிளவுவாத அரசியலை வெறுப்பு அரசியலை உயர்த்திப் பிடிப்பதால் பாஜகவை எதிர்க்கிறோம் தொடர்ந்து எதிப்போம் என அவர் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.