“எங்க போனாலும் கூட்டம் அள்ளுது”.. கொங்கு மண்டலத்தில் சிம்மாசனம் போட்டு அமரும் விஜய்? - பதறும் அதிமுக கூட்டணி !
“ஊழல் மலிந்த அரசியல் கலாசாரமும், மதம் சார்ந்த பிளவு அரசியலும் நமது முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது” என்ற வார்த்தைகளை உதிர்த்த பின்னரே அரசியல் பிரவேசத்தை துவங்கினார் நடிகர் விஜய். விக்ரவாண்டியில் நடந்த முதல் தவெக கட்சி மாநாட்டிலேயே “அரசியல் எதிரி என திமுக -வையும் கொள்கை எதிரி என பாஜகவை -யும் முன்னிறுத்தினார்.
அந்த முதல் மாநாட்டிலே பெரும் கூட்டம் கூடியது, அதிலிருந்து விஜய் எங்கு சென்றாலும் தன்னை தவெக தலைவராக முன்னிறுத்தியே செல்கிறார். தனது Face Value -விற்கு கூடும் கூட்டத்தை பார்த்து விஜய் புளகாங்கிதம் அடைந்தாலும், தவெக களத்தில் இன்னும் வலிமை குன்றியே காணப்படுகிறது என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யை விடாது அழைக்கும் அதிமுக!
அடைப்படையில் எடப்பாடிக்கு பாஜக கூட்டணியில் இருப்பதில் விருப்பம் இல்லை என்பது போல் தெரிகிறது.. மேலும் களத்திலும் பாஜக -வோடு இணைந்து பணிபுரிய மறுப்பதாகவும் இதனால் மாவட்ட நிர்வாகிகள் திணறுவதாகவும் தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன.
அதுமட்டுமின்றி இன்னமும் பாஜக -வாழ் தமிழ் நாட்டில் சோபிக்க முடியவில்லை.இதெயெல்லாம் நிச்சயம் பழனிசாமி யோசிக்கிறார். அதனால் தான் கடம்பூர் ராஜு -விலிருருந்து அனைவரும்”தம்பி நம்மோடு சேர வேண்டும்” என அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் பாஜக -வுடன் இணைவது தனத்துக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என விஜய் நன்கு அறிவார். இப்போதே அவருக்கு 30% ஓட்டு வங்கியை பெறுவார் என்று கருத்து கணிப்புகள் சொல்கின்றன. மேலும் கொங்கு மண்டலத்திலே கணிசமான அளவு அதிமுக -வின்ஓட்டு வங்கியை விஜய் உடைப்பார் என நம்பப்படுகிறது.ஆனால் ஒருவேளை விஜய் பாஜக அதிமுக கூட்டணியில் கைகோர்த்தால் விஜய் -க்கு இறங்குமுகம் தான் என்கின்றனர் ஆர்வலர்கள்.
திமுக -விற்கான வெற்றி வாய்ப்பு!
திமுக கூட்டணி மிகக்கச்சிதமாக உள்ளது. சித்தாந்த ரீதியாக ஒருமித்த கருத்துக்களைக்கொண்ட கட்சிகளை கைக்கொண்டு தங்களிடம் உள்ள 4 ராஜ்யசபா எம்.பி சீட்டுகளை முறையாக பிரித்துக்கொடுத்து தேர்தல் வேலையில் ஈடுபட்டிருக்கிறது. 2026 -தேர்தலில் எப்பாடுபட்டாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடும் ஸ்டாலின் இருக்கிறார். மேலும் வருகிற கருத்து கணிப்புகளும் இந்த மும்முனை போட்டி கடுமையாக இருந்தாலும் திமுக மீண்டும் வெற்றி அடைய பெரு வாய்ப்பு உண்டு என்றே சொல்லுகின்றனர்.
ஆனால் இங்கே மீண்டும் விஜய் அச்சுறுத்தலாக மாறி வருகிறார். விஜய் திமுக -வின் ஓட்டை உடைப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் இருந்தாலும் அவர் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது அச்சத்துக்குரிய ஒரு விஷயம்தான்.
2026 யாருக்கான களம்!
இதுவரை தமிழ்நாடு சந்திக்காத தேர்தலாக வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆட்சிக்கட்டிலில் யார் அமரப் போகிறார் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். ஒருவேளை பாஜக -அதிமுக- தவெக கூட்டணி அமைந்தால் திமுக ஆட்சியிலிருந்து நீக்கப்படலாம் ஆனால் அதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. இந்தபோதிலும் 2026 -ல் விஜய் முதல்வராவது சாத்தியமில்லை. இந்த 2026 தேர்தல் களத்தில் விஜய் முக்கிய பங்கு வகிப்பார் ஆனால் இது அவருக்கான களம் இல்லை என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்