"சவப்பெட்டிக்குள் அசைந்த சிறுமி.. பதறிப்போன குடும்பத்தினர்" - மகளின் இறுதி சடங்கில் நடந்த இன்ப அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ

அப்போது, ​​சிறுமிக்கு நாடித்துடிப்பு இல்லை என்பதை உணர்ந்துள்ளார். மேலும், தனது மகள் இறந்துவிட்டாள் என்பதையும் கண்டு அவர் பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.
Guatemala girl wakes up in coffin
Guatemala girl wakes up in coffin
Published on: 
Updated on: 
1 min read

குவாத்தமாலாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், இறந்துவிட்டதாக கூறப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இறுதி சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, திடீரென அவர் எழுந்து அமர்ந்துள்ளார். இந்த நிகழ்வானது அங்கு குழுமி இருந்தவர்களுக்கு இன்பம் கலந்த அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை (அக் 10) அதிகாலை நேரத்தில், குவாத்தமாலாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு உடல் நல குறைவின் காரணமாக அந்த சிறுமி அவரது தந்தையால் அழைத்து செல்லப்பட்டுள்ளார். காரில் அழைத்துச் சென்றபோது, ​​சிறுமி சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியின் தந்தை ஆபிரகாம், 'மகள் சுவாசிக்கிறாளா?' என்று பார்க்க காரை நிறுத்தியுள்ளார். அப்போது, ​​சிறுமிக்கு நாடித்துடிப்பு இல்லை என்பதை உணர்ந்துள்ளார். மேலும், தனது மகள் இறந்துவிட்டாள் என்பதையும் கண்டு அவர் பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுமியின் தந்தை இதை அனைத்தையும் சோதித்ததால், அவர் தனது மகளை மருத்துவமனைக்கு பரிசோதிப்பதற்காக அழைத்து செல்லவில்லை. இதனையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் ஒரு சவப்பெட்டியை வாங்கி, இறுதி அஞ்சலியைத் தொடங்குவதற்காக தயாராக இருந்துள்ளனர். மேலும், சிறுமியின் சடலத்தின் முன்பு பலரும் அழுது கொண்டிருந்துள்ளனர். மேலும், சிறுமியின் தாய், சவப்பெட்டியின் மீது கண்ணீருடன் சாய்ந்திருந்த நிலையில், திடீரென உள்ளே ஒரு அசைவை உணர்ந்துள்ளார்.

இதனையடுத்து, சவப்பெட்டியின் மூடி வேகமாக அகற்றப்பட்டுள்ளது. ​​அப்போது தங்களது மகள் உயிருடன் இருப்பதை அவர்கள் கண்டுள்ளனர். மேலும், அந்த சிறுமி கண்களைத் திறந்து நிமிர்ந்து உக்கார்ந்து உள்ளார்.

அதன்பின்னர், அங்கிருந்தவர்கள் சிறுமிக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். அந்தத் தருணமானது படமாக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது, பின்னர் வைரலாகியுள்ளது.

மயங்கி விழுவதற்கு முந்தைய தருணங்களை விவரித்த அந்த சிறுமி, "தான் உயிரோடு இருப்பது ஒரு அதிசயம்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். "என் இதயம் மிகவும் கடுமையாக வலிக்கத் தொடங்கியது; அது கனமாக இருந்தது, பிறகு நான் மயங்கி விழுந்தது போல சுயநினைவை இழந்தேன்," என்று சிறுமி பகிர்ந்துள்ளார்.

மேலும் உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசிய அவரது தந்தை, தன் மகள் சுயநினைவை இழந்த பிறகு அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“நான் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவளிடம் சென்றேன். அவள் இருந்ததற்கான தடயமே இல்லாமல் போயிருந்ததைக் கண்டேன்; அவள் வழியிலேயே இறந்துவிட்டாள்,” என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

"அவள் சுவாசிப்பதை நிறுத்திவிட்டதையும், அவளுடைய மணிக்கட்டுகளில் நாடித்துடிப்பை என்னால் உணர முடியவில்லை என்பதையும் நான் கண்டேன்" என சிறுமியின் தந்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com