
நேற்று அதிகாலை, ஈரான் இஸ்ரேல் மீது மிக முக்கியமானதொரு தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. குடிமக்கள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலூனிஸ்டிக் ஏவுகணைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
டெல்அவிவில் பகுதியில் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) மிக பலப்படுத்தப்பட்டு உளவு மையத்திற் மோசமாக தாக்கியது. கிளஸ்டர் வெடிபொருட்களைக் கொண்ட இந்தத் தாக்குதல், இஸ்ரேலின் பல அடுக்கு வான் பாதுகாப்பை தாக்கி அளித்துள்ளது. இதில் 45 பேருக்கும் மேல் உயிரிழந்த நிலையில் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவ உளவுத்துறை வல்லுநர்களின் கூற்றுப்படி தெற்கு மற்றும் மத்திய முனைகளில் "டிஜிட்டல் பிளாக் அவுட்" என்ற நிலையை ஈரான் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
"உலகில் இஸ்ரேலின் பாதுகாப்பு கேடயம் ஒப்பற்றது" என்று கடந்த வாரம்தான் நெதன்யாகு பேசியிருந்தார், ஆனால் தற்போதைய ஈரானின் தாக்குதல் நெதன்யாகு -விற்கு மிகப்பெரும் நெருக்கடியாக அமைய வாய்ப்புள்ளது.
மேலும் சமீபத்தில் வெளியான தகவலின் படி அமெரிக்காவின் “பச்சை விளக்குக்காக” காத்திருக்காது.. ஈரானின் அணு ஆயுத மையங்களை முற்றிலுமாக வீழ்த்தாமல் ராணுவ நடவடிக்கைகளை பின் வாங்க மாட்டோம்” என இஸ்ரேலின் பிரதமர் நெதென்யாகு தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் பதற்றம்!
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கினால், அது மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்கும் என சீனாவும், ரஷ்யாவும் எச்சரிக்கை விடுத்துள்ளன. அதற்கு கரணம் சம்பீத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த போர்ச்சூழல் குறித்து பேசுகையில் “காமேனி எந்த சமரசமும், நிபந்தனையும் இல்லாமல் சரணடைய வேண்டும், என்ன செய்யப்போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது.. வரும் நாட்களில் மிகப்பெரிய சம்பவங்கள் காத்திருக்கின்றன” எனக்கூறி ஈரானுக்கு சூசகமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ட்ரம்ப்..
இவர்களின் இந்த மோதல் போக்கு தீவிரமடைந்தால் அது மிகப்பெரும் விளைவுகளை கிட்டத்தட்ட 3 -ஆம் உலகப்போர் உண்டாக வாய்ப்புள்ளதாக உலக நாடுகள் அஞ்சுகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.