"இந்தியா 'டாப் போதைப்பொருள்' கடத்தல் நாடுகளில் ஒன்றா..." ட்ரம்ப் வெளியிட்ட பகீர் தகவல்!

பென்டானில், மெத்தம்பெட்டமைன் மற்றும் பிற கொடிய செயற்கை போதைப்பொருட்களைத் தயாரிக்கப் பயன்படும் பல முன்னோடி ரசாயனங்கள் சீனாவிலிருந்து கடத்தப்படுகின்றன.
"இந்தியா 'டாப் போதைப்பொருள்' கடத்தல் நாடுகளில் ஒன்றா..." ட்ரம்ப் வெளியிட்ட பகீர் தகவல்!
"இந்தியா 'டாப் போதைப்பொருள்' கடத்தல் நாடுகளில் ஒன்றா..." ட்ரம்ப் வெளியிட்ட பகீர் தகவல்!
Published on
Updated on
2 min read

2027 நிதியாண்டிற்கான முக்கிய போதைப்பொருள் போக்குவரத்து அல்லது சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15 அன்று அமெரிக்க காங்கிரஸிடம் சமர்ப்பிக்கப்பட்ட வருடாந்திர அதிபர் தீர்மானம், 23 நாடுகளை முக்கிய போதைப்பொருள் போக்குவரத்து அல்லது சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளாக அடையாளம் காட்டுகிறது.

ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, கொலம்பியா, மியான்மர் மற்றும் லத்தீன் அமெரிக்கா, கரீபியன் பிராந்தியத்தைச் சேர்ந்த பல நாடுகளுடன் இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கையில், பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசு சட்டவிரோத ஓப்பியம் பாப்பி சாகுபடியைத் தடுக்கவும், விநியோகச் சங்கிலியை ஒழுங்குபடுத்தவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வரவேற்றுள்ள ட்ரம்ப், "அமெரிக்கா-இந்தியா போதைப்பொருள் கொள்கைக் கட்டமைப்பு மூலம் தொடர்ச்சியான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்த அறிக்கையின்படி, உலக அளவில் சட்டவிரோத போதைப்பொருட்களைத் தயாரிப்பதற்கான ரசாயனங்களை விநியோகிக்கும் முக்கிய நாடாக சீனா திகழ்கிறது.

பென்டானில், மெத்தம்பெட்டமைன் மற்றும் பிற கொடிய செயற்கை போதைப்பொருட்களைத் தயாரிக்கப் பயன்படும் பல முன்னோடி ரசாயனங்கள் சீனாவிலிருந்து கடத்தப்படுகின்றன.

Trump, Xi Jinping
Trump, Xi Jinping

இதுகுறித்து சீனா அதிபரிடம் நேரடியாகப் பேசியதாகவும், அதன் விளைவாக சீனாவில் இருந்து குறிப்பிட்ட ரசாயனங்களை ஏற்றுமதி செய்ய உரிமம் பெறுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், கடத்தல்காரர்கள் ரசாயனங்களை விநியோகிக்க புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருவதால், சீன மக்கள் குடியரசு (PRC) இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெனிசுலாவை பாராட்டிய ட்ரம்ப்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெனிசுலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாகக் கைது செய்தது.

அவரை சட்டவிரோத சர்வாதிகாரி என்றும், போதைப்பொருள் கடத்தல்காரர் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. அவரது நீக்கத்துக்குப் பிறகு, வெனிசுலாவின் போதைப்பொருள் தடுப்பு ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

டெல்சி ரோட்ரிகஸ்
டெல்சி ரோட்ரிகஸ்

தற்போது அமெரிக்காவின் ஆதரவுடன் டெல்சி ரோட்ரிகஸ் இடைக்கால அதிபராகச் செயல்பட்டு வருகிறார். மதுரோவின் துணை அதிபராக இருந்த ரோட்ரிகஸ், வெனிசுலாவின் சுரங்கம், மின்சாரம் மற்றும் எண்ணெய்த் துறைகளை அமெரிக்கத் தலைமையிலான வெளிநாட்டு மற்றும் தனியார் மூலதனத்துக்குத் திறந்துவிட்டுள்ளார். இதில் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் பலன் பெறுகிறார் என்று செய்திகள் வெளியாகி, உலக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையில், பிரேசிலை உலகளாவிய கொக்கைன் பரவலின் மையப்பகுதி என அமெரிக்க அதிபர் கடுமையாகச் சாடியுள்ளார்.

ட்ரம்ப் வெளியிட்ட நாடுகள் பட்டியல்:

ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, பர்மா, சீனா, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹைட்டி, ஹோண்டுராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகரகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு மற்றும் வெனிசுலா.

"இந்தியா 'டாப் போதைப்பொருள்' கடத்தல் நாடுகளில் ஒன்றா..." ட்ரம்ப் வெளியிட்ட பகீர் தகவல்!
சென்னையை ‘அசிங்கமான சகோதரி’ என அழைக்கும் அமெரிக்கா! தமிழக ஏற்றுமதிக்கு என்ன ஆபத்து?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com