
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், வேலை செய்யும் இடங்களில் திறமையை அதிகரிக்க புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. சரியா வேலை செய்யாதவங்களை சீக்கிரமாக வீட்டுக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளார்கள். வேலையை விட்டு நீக்கி பிறகும் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த நபரை மீண்டும் வேலைக்கு எடுக்க மாட்டாங்க. சிலரை வேலையை விட்டு அனுப்புறது நல்லது என ஒரு கணக்கு போட்டு வைத்துள்ளார்கள். இதை பலரும் "good attrition"னு சொல்லி வருகிறார்கள்.
மைக்ரோசாஃப்ட் கம்பெனி சரியாக வேலை செய்யாத 2,000 பேரை வேலையை விட்டு நீக்கி உள்ளது. அவங்களுக்கு சம்பளமும் கொடுக்க வில்லை. கம்பெனியோட வேலை செய்யும் முறைய மாற்றவும், சரியாக வேலை செய்யாதவங்களை உடனே நீக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தற்போது மைக்ரோசாஃப்ட் புதுசா சில விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்கள். அதில் வேலை செய்ய கஷ்டப்படுறவங்களுக்கு இரண்டு வழி இருக்கு. ஒன்று, கம்பெனி சொல்வது போல் வேலை செய்து குறிப்பிட்ட காலத்துக்குள் திறமையை காட்ட வேண்டும். இல்லை என்றால், வேலையை விட்டுட்டு 16 வார சம்பள வாங்கிட்டு போயிடலாம்.
யாரை மீண்டும் வேலைக்கு எடுக்க மாட்டாங்க?
மைக்ரோசாஃப்ட்டோட புது Chief People Officer, Amy Coleman ஒரு ஈமெயில் அனுப்பி உள்ளார். அதில், யாருக்கு ரொம்ப கம்மியான ரேட்டிங் (0 அல்லது 60%) கிடைக்குதோ, அல்லது PIPயில் இருக்காங்களோ அவர்களை கம்பெனிக்குள் வேற வேலைக்கு மாற்ற மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் வேலையை விட்டு போனால், அவங்களை இரண்டு வருடத்திற்கு திரும்ப வேலைக்கு எடுக்க மாட்டாங்க என்று சொல்லி உள்ளார். இதை "Rewards outcomes"னு சொல்றாங்க.
CEO சத்யா நாடெல்லா சில வருடங்களுக்கு முன் "வளர்ச்சி மனப்பான்மை"னு ஒரு கொள்கையை கொண்டு வந்தார். அதில் அனைவரும் நன்றாக வேலையில் கவனம் செலுத்துவார்கள் என நினைத்தார்கள். ஆனால், தற்போது பழைய மாதிரி கண்டிப்பான முறையை திரும்ப கொண்டு வர மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமேசான், மெட்டா நிறுவனத்திலும் இதே தான் :
இதே போல் பல நிறுவனங்கள் புதிய விதிகளை அமல்படுத்தி வருகின்றன. அமேசான் நிறுவனத்தில் "unregretted attrition"னு சொல்றாங்க. அதாவது, சில பேரை வேலையை விட்டு அனுப்புவது நல்லது என நினைக்கிறார்கள். மெட்டா கம்பெனியில் சிலரை மீண்டும் வேலைக்கு எடுக்காமல் பிளாக் லிஸ்ட்ல போட்டு வெச்சிருக்காங்க.
சரியா வேலை செய்யாதவர்களை வேலையை விட்டு தூக்குறது ஒரு பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், கம்பெனிகள் இதை ஒரு நல்ல விஷயமாக நினைக்கிறார்கள். காரணம், சரியா வேலை செய்யாதவர்களை வைத்து கம்பெனிக்கு நஷ்டம் வருவதை விட, அவர்களை வேலையை விட்டு தூக்குவது நல்லது என நினைக்கிறார்கள். இதனால் கம்பெனி நல்லா வேலை செய்றவர்கள் மேல் அதிகமாக கவனம் செலுத்த முடியும்.
மைக்ரோசாஃப்ட் கம்பெனி இப்போது எடுத்திருக்கும் முடிவுகளால் நிறைய ஊழியர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால், கம்பெனி இதனால் நல்லா வளரும் என நம்புறாங்க. இந்த மாதிரி கண்டிப்பான விதிமுறைகளை கொண்டு வருவதால் ஊழியர்கள் நன்றாக வேலை செய்வார்கள் என கம்பெனி நினைக்கிறார்கள். மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் இந்த புதிய முடிவால் வேலை செய்யும் இடத்தில் நிறைய மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்