“புடின் போர் நிறுத்தத்தை இழுத்தடிக்கிறார்” நாம் போருக்கு தயாராக இருக்க வேண்டும்..! -பிரிட்டன் கடும் கண்டனம்!!

மேற்கத்திய எல்லைகளில் பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் வேண்டும் என்பதையும், எந்த நேரத்திலும் ...
m16 cheif
m16 cheif
Published on
Updated on
1 min read

பிரிட்டனின் புதிய ராணுவ உளவுத்துறை தலைவராக (M16) பொறுப்பேற்றுள்ள ப்ளேய்ஸ் மெட்டெர்வேலிஸ், ரஷ்யா உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அதிபர் புதினுக்கு எண்ணம் இல்லை எனவும், போர் நிறுத்தம் மீதான பேச்சு வார்த்தையை  அவர் இழுத்தடிப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

ராணுவ உளவுத்துறை தலைவராக பதவியேற்ற பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “ நாம் தொடர்ந்து உக்கிரமான ஆக்கிரமிப்பை ரஷ்யா மேற்கொண்டு வருவதை பார்க்கிறோம், NATO - உக்ரைன் இணைவை புதின் தொடர்ந்து தோல்வியுற செய்து வருவதோடு போர் நிறுத்தம் மீதான அமைதி பேச்சு வார்த்தைகளையும் அவர் ‘இழுத்தடிப்பதன்’ மூலம் தனது சொந்த மக்களின் மீதே அவர் போர் பதற்றத்தை உண்டாக்குகிறார்” என பேசியிருந்தார். 

“போரை நிறுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் நாம் தொடர்கிறோம். உக்ரைன் சார்பாக போர் நிறுத்தத்திற்காக நாம் போடும் அழுத்தங்கள் தொடரும்.” என கூறினார். பனி காலத்தை சத்தமாக கொண்டு போர் நடவடிக்கைகளை ரஷ்யா தீவிரப்படுத்தும் என ஐரோப்பிய உளவுத்துறை சந்தேகிக்கிறது.

மேலும், மேற்கத்திய எல்லைகளில் பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் வேண்டும் என்பதையும், எந்த நேரத்திலும் புதின் போர் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்ற அச்சம் நிலவுவதால், கிரெம்லின் - அமெரிக்கா -வை உள்ளடக்கிய பேச்சு வார்த்தை தொடரும் என அவர் வலியுறுத்தினார். 

“ரஷ்யா -வின் போர் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் குறித்து முன்னதாகவே மெட்டெர்வேலிஸ், எச்சரித்திருந்தார். அதன் பிறகு சில மணிநேரங்கள் கழித்து, ‘பிரிட்டனின் பெரும்பாலானோர் தாய் நாட்டிற்காக சண்டையிட தயாராகி இருக்க வேண்டும். இது தேசத்திற்கு நாம் ஆற்றும் கடமை’ என பிரிட்டனின் ராணுவ தலைமை எச்சரித்திருந்தது. NATO -தலைவர் மார்க் ரூட்டும், “ஒரு நீண்டகால போருக்கு நாம் தயாராக வேண்டும்” எனவும் எச்சரித்திருந்தார். ட்ரம்ப் நிர்வாகம், ‘போர் நிறுத்தத்திற்கான’ புதிய முன்னெடுப்பை இந்த வாரம் எடுத்திருந்தது.

இம்மாத துவக்கத்தில் இவர்கள் இருவரும் ரஷ்ய அதிபருடன் அமைதி பேச்சு வார்த்தையில் பல மணி நேரம் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மெட்டெர்வேலிஸ், தனது கன்னிப்பேச்சில் ‘ரஷ்யாவின் இந்த நீண்ட கால போர் நடவடிக்கை மிக ஆபத்தானது’ என எச்சரித்திருந்தார். மேலும் தினம் தோறும், ரஷ்யா சைபர் தாக்குதலை நடத்தி வருவதாகவும், மேலும் சில இடங்களை குறிவைத்து டிரோன் தாக்குதலை திட்டமிடுவதாகவும்’ குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த தொடர் அச்சுறுத்தலாலும், ரஷ்யா - உக்ரைன் போர் மீதான பேச்சு வார்த்தை சுமூகமான முடிவை எட்டாத காரணத்தினாலும், மேற்கத்திய எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com