EXCLUSIVE: விண்ணை முட்டும் தங்கம் விலை.. அப்போ இனி வெள்ளி வாங்கினா லாபம் உண்டா? - புட்டு புட்டு வைக்கும் பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன்
நமது மாலை முரசு தொலைக்காட்சியின் 'ஒரு செய்தி பல கோணங்கள்' நிகழ்ச்சியில், நேற்றைய (டிச.16) சிறப்பு விருந்தினராகப் பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி குறித்த பல முக்கியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
தொகுப்பாளர்: சார், தங்க விலை அப்படிங்கிறது சரமாரியாக வரலாறு காணாத விதத்தில் தினம் தினம் ஏறிக்கிட்டே வருது. சோ, இதுக்குக் காரணம் என்ன? ஒரு சாமானிய மக்கள் இதை எப்படிப் புரிஞ்சுக்கிறது?
திரு. சோம வள்ளியப்பன்: இந்த கிராஃப் (Graph) நம்மள விட சாதாரண மக்கள் நிறைய நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க. தங்கம்தான் வந்து உறுதியான ஒரு முதலீட்டுப் பொருள், அதுதான் அவங்க பெரும்பாலும் பயன்படுத்திட்டு இருக்காங்க. கடந்த ஒரு 20 ஆண்டுகளா பங்குச் சந்தைகள் ரொம்ப பிரபலம் அடைஞ்ச பிறகு, அது தவிர பங்குச் சந்தை ஒட்டிய பல்வேறு புதிய முதலீட்டு வாய்ப்புகள் எல்லாம் வந்த பிறகு தங்கத்தின் மீது ஒரு கவனம் குறைஞ்சு மற்ற முதலீடுகள்ல மக்கள் ஈடுபட்டாங்க.
தங்கம் வந்து 'ரியல் அசெட்' (Real Asset)னு சொல்றோம். மற்றதெல்லாம் வந்து அவ்வளவு... தங்கத்தையும் நிலத்தையும் தான் நம்ம உண்மையான சொத்துனு சொல்லுவோம், மிச்சம் எல்லாம் பேப்பர். அப்படி பாக்கையில தங்கம் வந்து உலகளாவிய ஒரு பொருளா இருக்கு. இப்போ இதனுடைய ஒரு விலை மாற்றமும் எல்லாரையும் பாதிக்காது. இப்போ இன்னைக்கு நம்ம பேசிட்டு இருக்குறது இதுதான், உலகத்துல இருக்குற எல்லா நாடுகள்ல இருக்குற தொலைக்காட்சியிலயும் இதேதான் இன்னைக்கு பேசிட்டு இருப்பாங்க.
நேத்து தங்கம் பண்ண ஒரு வேலை, உலகம் மொத்தமும் செய்தித்தாள்கள்ல, செய்தி ஊடகங்கள்ல எல்லாத்தையும் தலைப்புச் செய்தியா இன்றைக்கு அப்படி இருக்கக்கூடிய ஒரு பொருள்தான் தங்கம். அரசாங்கங்களே யோசிப்பாங்க, பல பெரிய கார்ப்பரேட்ஸ் யோசிப்பாங்க, நம்ம வாங்காம விட்டுட்டோமோ என்ன பண்ணிட்டோமோன்னு. ஆனா தங்கம் வந்து இவ்வளவு விலையும் இவ்வளவு சீக்கிரமா உயரும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. இது எல்லாருமா சேர்ந்து பண்றதுனுடைய ஒரு எஃபெக்ட் (Effect), யாரும் தனியா பண்ணல. அதனால எந்த தனியா பண்றவங்களுக்கும் இது இப்படித்தான் ஆகப்போகுதுன்னு தெரியாது.
அதனால இப்ப கடைசியா அதை இன்னும் ஒரு தள்ளு தள்ளிவிட்டது வந்து அமெரிக்காவுடைய 'பெடரல் ரிசர்வ்' உடைய வட்டி விகிதக் குறைப்பு. அது தவிர அவங்க 'பாண்ட் பர்சேசிங் புரோகிராம்' (Bond Purchasing Program)னு ஒன்னு சொல்லிருக்காங்க. ஷார்ட் டெர்ம்ல அவங்க ஷார்ட் டெர்ம் ட்ரஷரிஸ் ஒரு 40 பில்லியன் டாலருக்கு வருஷ வருஷம் வாங்க போறேன்னு சொல்லிருக்காங்க. இது மாதிரி பல தகவல்கள் ஒன்னு மேல ஒன்னா உதவியா வந்துட்டு இருக்கு.
இதனுடைய ஆரம்பம் பாத்தீங்கன்னா கோவிட் (Covid). கோவிட் அப்போதான் தங்கத்தைத் தூக்கி மேடையில உட்கார வச்சாங்க. அப்பல இருந்து அது ஓடுற ஓட்டம் இன்னும் நிக்கவே இல்லை. ஆனா இன்னைக்கு நம்ம நேயர்களுக்கு ஒன்னு சொல்லணும், அதாவது இந்த தங்கத்தை இப்ப பார்க்கறவங்க, வாங்கணும்னு நினைக்கிறவங்க, குடும்பத்துல இருக்குறவங்க, கல்யாணத்துக்கு வேணும்னு நினைக்கிறவங்க... அவங்க எல்லாம் வந்து தங்கம்ங்கிறது விலை ஏறிட்டுதான் இருக்கும், வாங்கிடணும். கையில காசு இருக்குறப்ப வாங்கிடணும். கொஞ்சம் கொஞ்சமா சேர்க்கணும் தங்கத்தைங்கிறத எப்பயுமே சொல்றதுதான். நம்மளால சரியான நேரத்தைக் கண்டுபிடிச்சு வாங்க முடியாது.
ஆனா அந்த ட்ரேடு (Trade) பண்ற, "நான் வாங்குனா விலையேறப் போகுது நான் வாங்குறேன்னு" நினைக்கிறவங்களுக்கு இப்ப வந்திருக்கிற இது... தங்கம் எப்பயுமே வந்து அதனுடைய விலை முடிவு செய்யப்படுவது அமெரிக்க டாலர்ல சர்வதேச சந்தையில முடிவு செய்யறத நம்ம இந்தியாவுல அத டாலர் என்ன மதிப்போ அத கன்வெர்ட் (Convert) பண்ணி இந்தியாவுல அந்த விலைய நம்ம வைக்கிறோம்.
இது வந்து இப்ப நடந்துகிட்டு இருக்குற 4300 டாலர்ங்கிறது ஒரு 'ரெசிஸ்டன்ஸ்' (Resistance)னு சொல்றோம். அதாவது தொடர்ந்து விலை ஏறிக்கிட்டே வந்து ஒரு இடத்துக்கு வந்தா அதுக்கு மூச்சுத் திணறும். அதுக்கப்புறம் அது கொஞ்சம் இளைப்பாறிட்டுதான் திருப்பி ஏறும்.
தொகுப்பாளர்: பார்த்தா அப்படி தெரியலையே... இறங்குற மாதிரி இறங்கி திரும்ப ஒரு மூச்சப் பிடிச்சு திரும்ப மேல ஏறும்?
திரு. சோம வள்ளியப்பன்: ஆமா ஆமா, அதுதான் ஒரு ஒரு முறையும் அந்த மாதிரி சர்ப்ரைஸ் (Surprise) கொடுக்குது. பட் இது வந்து ஒரு பிரீவியஸ் ஹை (Previous High). இதுவரைக்கும் தங்கம் போயிருக்கிறதுல அதிகமா போனது அக்டோபர் மாசம் 2024-ல, அது 4300 டாலர் போயிருக்கு. இந்த 4300-க்கு மேல இப்ப போயிருச்சுன்னா இனி கையில பிடிக்க முடியாது. அது இந்த கேட்டைத் தாண்டிட்டாருன்னா இவர் அடுத்த செக்யூரிட்டி ரொம்ப தூரத்துல இருக்காரு, இவர் இன்னும் ஓடுவாரு, ரொம்ப தூரம் ஓடுவாரு.
தொகுப்பாளர்: அதை எப்படி மக்கள் கணிக்கிறது? மக்கள் வாங்கணும்னு சொல்லிட்டு அவங்க எப்படி அதை வாங்குறதுனு ஒரு இடத்துல இருக்கு. அவங்க நினைப்பாங்க ஏறிட்டே போகுது, கொஞ்சம் குறைஞ்ச உடனே வாங்கலாம்னு நினைப்பாங்க இல்லையா?
திரு. சோம வள்ளியப்பன்: இல்ல, அதான் இது வந்து நம்ம மட்டும் ஹேண்டில் (Handle) பண்றதா இருந்ததுன்னா அதெல்லாம் கணிக்கலாம். இது வந்து பலரும் இப்போ அமெரிக்கா பண்ற பல வேலைகளால, குறிப்பா அந்த ரஷ்யாவ கைய முறுக்கி அவங்களுடைய டாலர் ரிசர்வ்ஸ் (Dollar Reserves) எல்லாம் பயன்படாத மாதிரி பண்ணது... இந்த மாதிரி எல்லாம் வேலை செய்யறதுனால அமெரிக்க டாலர் இனி நம்பிக்கை இல்லை அப்படின்னு சொல்லிட்டு உலக பல நாடுகள் வச்சிருக்கிற, பெரும்பாலான நாடுகள் வச்சிருக்கிற ரிசர்வ் வந்து அமெரிக்க டாலர்தான். சரி, அதுல இருந்து நம்ப முடியாதுப்பா, என்னைக்கு வேணாலும் இவன் செல்லாதுன்னு சொல்லிருவான் போல இருக்கு, நம்ம தங்கமே வச்சுக்கலாம்னு உடனடியா அதை பண்ண முடியாது. அதனால கொஞ்சம் கொஞ்சமா வாங்கிச் சேர்க்குறாங்க. இந்தியாவும் மாத்துது, டாலர்ல இருந்து நாம தங்கத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா மாறுறோம்.
சீனாதான் அதை வேகமா பண்ணாங்க, நிறைய பண்ணிருக்காங்க. ஆனா அவங்க பண்ணி முடிக்க 10, 20 வருஷம் ஆகும், அவ்வளவு ரிசர்வ்ஸ் வச்சிருக்காங்க. அப்போ இவ்வளவுத்தையும் மாத்தணும்னா... இப்ப நம்ம பழைய நோட்ட கொடுத்து புது நோட்டு மாத்த எவ்வளவு டைம் ஆகுது? அது மாதிரி இப்ப டாலர கொடுத்து தங்கத்தை மாத்தணும்னா தங்கம் என்ன ஆகும்? எல்லாரும் அதை கேட்டாங்கன்னா டிமாண்ட் அதிகமாகும். அப்போ ஒரு பெரிய தனம்ங்கிறது யாரு, பெரிய கட்டு தலைக்கட்டு யாருன்னா அவங்க ரிசர்வ் பேங்க்ஸ்தான். உலகத்துல இருக்குற எல்லா ரிசர்வ் பேங்கும் தங்கத்தை வாங்கணும்னு நினைக்கிறாங்க.
அவங்க வாங்குனா விலை ஏறும்பான்னு சொல்லிட்டு, ஒரு ஊர்ல விலை ஏறப் போகுதுன்னா இடத்தை வாங்கி முதல்ல இவன் வச்சுக்குவான், பவர் போட்டு வச்சுக்குவான், விலை ஏற ஏற நம்ம வித்துக்குவோம்னு சொல்லிட்டு அட்வான்ஸ் பண்ற மாதிரி இப்போ தங்கத்தை எல்லாரும் வாங்கி வச்சிக்கிறாங்க ஏறப்போகுதுன்னு. ஆக இப்ப ரொம்ப ஊரெறிஞ்ச ரகசியமா போச்சு தங்கம் விலை ஏறும்னு.
ஆனா இந்த 4300-ல ஒரு தடுப்பு வரணும். நம்ம அந்த ஒரு லட்ச ரூபாயில வரணும். இயல்பா பார்த்தா வந்து கொஞ்சம் இறங்கிட்டுதான் ஏறணும். ஆனா இது தடுக்கப்படுமா, இதையும் மீறுமான்னா மீறுறது சிரமம்.
தொகுப்பாளர்: ஒருவேளை அந்த ரெசிஸ்டன்ஸை உடைச்சா இன்னும் மேல போகும்னு சொல்றீங்க. ஒருவேளை குறைஞ்சா எவ்வளவு குறையலாம் சார்?
திரு. சோம வள்ளியப்பன்: இல்ல அதுவும் நம்மளால சரியா சொல்ல முடியாது. குறைஞ்சா அதாவது 2008-ல ஒரு பெருசா வீழ்ச்சி வந்தது. 1000 டாலர்ல இருந்து 780 டாலர் வந்தது, 25% குறைஞ்சது. அதுக்கப்புறம் அது உயர்ந்தது வந்து வேகமா 1500 டாலருக்கு போச்சு. அதனால ரொம்ப பெரிய ஆளுங்க ஹேண்டில் பண்றதுனால இது ரொம்ப வேகமா ஏறும் இறங்கும். இப்ப இதுல எவ்வளவு தூரம் ஸ்பெக்குலேட்டிவ் மணி (Speculative Money) இருக்குங்கிறத பொறுத்துதான் கரெக்ஷன் (Correction) டீப்பா இருக்கும்.
இப்ப நிறைய பேர் முழுசா வாங்கி வச்சிக்கிறதுக்கு நம்பிக்கை இல்லாம, இத குளிர்காயலாம் இந்த விலை ஏற்றத்துலனு சொல்லி டெம்பரரியா வந்திருந்தால், அவங்களுடைய சொந்த பணம் இல்லாம கடன் வாங்கி அல்லது கொஞ்சம் அட்வான்ஸ் மட்டும் கொடுத்து வச்சிருந்தாங்கன்னா அவங்க எல்லாம் அந்த கரெக்ஷன் போது "போதும்டா சாமி நமக்கு கிடைச்ச லாபம்"னு சொல்லிட்டு விட்டுட்டு ஓடுவாங்க. அப்ப நிறைய இறங்கும். அதனால இது உள்ளார யார் இருக்கான்னு போர்வையைத் தூக்கிப் பார்த்தாதான் தெரியும், உள்ள நிறைய பேர் இருக்காங்க நமக்கு தெரியாது.
இப்ப அதனால நமக்கு தேவை என்றால் கொஞ்சம் கொஞ்சமா தொடர்ந்து வாங்குறதுதான். இன்னொன்னு என்ன சொல்றாங்க, இப்ப நீங்க இறங்குனா கூட இந்த 4300-ங்கிறதுல ரெசிஸ்டன்ஸ் வந்து இறங்குனா கூட மீண்டும் 2026-ஆம் வருடம் இன்னொரு புதிய உச்சத்தை அது தொடும் அப்படிங்கிறாங்க. அதனால நம்மளால அந்த ஷார்ட் டேர்ம்ல இது என்ன ஆகும்னு கண்டுபிடிச்சு கரெக்டா வாங்கி, அந்த கொஞ்சோண்டு லாபத்தை கூட மிஸ் பண்ணாம எடுத்துக்கிறது, கொஞ்சோண்டு நஷ்டத்தைக் கூட சந்திக்காம நம்ம வாங்குனதுல இருந்தே அது உயர்ந்துகிட்டே இருக்கணும்ங்கிறது இது ரெண்டையும் தங்கத்தைப் பொறுத்தவரைக்கும் நினைக்கக்கூடாது.
லாங் டெர்ம்க்கு பண்ணலாம், லாங் டெர்ம்க்கு வச்சுக்கலாம். ஏறலாம் இன்னும் கூட நம்ம நம்ப முடியாத அளவுக்கு கூட தங்கம் விலை உயரும் போல இப்ப வர நம்பிக்கைகள் இருக்கு. ஏன்னா இப்ப பல புது ஆளுங்க வர ஆரம்பிப்பாங்க. இப்போ மிஸ் பண்ணவங்க எல்லாம் வருவாங்க. தங்கம்னா அதெல்லாம் வேஸ்ட்ப்பா அப்படின்னு சொல்லிட்டு இருந்தவங்க எல்லாரும் இப்ப வர ஆரம்பிப்பாங்க. பண்ணி காமிச்சிருச்சுல்ல ஒரு முறை நான் இவ்வளவு தூரம் பண்ண முடியும்னு. அதனால இப்போ புதிய ஆதரவு வரும். ஏற்கனவே வாங்கி லாபம் பார்த்தவங்க, வெளியில போனவங்களும் திரும்ப ஏறுன உடனே "அடடா தெரியாம நம்ம வித்துட்டோம் லாபம் பாத்துட்டோம் நம்ம திருப்பி உள்ள போலாம்"னு வருவாங்க. அதனால இதை வச்சு ஒரு பெரிய விளையாட்டு விளையாண்டு இதை பெருசா விழ வச்சாதான் இந்த ஆட்டம் முடியும். அது ஒன்னு ரொம்ப பெருசா உயர்ந்து பெருசா விழணும், அதுவரைக்கும் இது நிதானமான ஏற்றம் தான்.
ஆனா வாங்குறவங்க கொஞ்சம் கொஞ்சமா வாங்கணும். நீங்க வந்து உங்களுக்கு ஒரு முடிவு எடுத்துட்டா கொஞ்சம் வாங்கிருங்க. அதாவது நம்ம கொஞ்சம் சொன்னா திருப்பி இன்னைக்கு நாளைக்கு இன்ன ரெண்டு மூணு நாள் பாருங்க... இன்னைக்கு ரெண்டு மூணு நாளைக்குள்ள ரொம்ப பெருசா உயராதுங்கிறதுதான் சார்ட் (Chart) சொல்லுது. சார்ட்ங்கிறது என்னன்னா இதுவரைக்கும் எவ்வளவு பேர் வாங்கி இருக்காங்க, எப்படி விலை உயர்ந்துருக்குது... இது வந்து இழுத்தா எவ்வளவு தூரம் இழுக்க முடியும்? இந்த வண்டிய கியர் மாத்துனாதான் அடுத்ததுக்கு போகும். இந்த கியருக்கு முட்டுது இப்போ. கியர் மாத்தப் போறாங்களா இங்க வச்சிருக்காங்களா? அட்லீஸ்ட் கிளட்ச் போட்டு கொஞ்சமாவது மாத்தி தான மாத்தணும் கியரை? அப்படியே தூக்கிட்டு போக முடியாதுல்ல. அது மாதிரி டெம்பரரியா ஒரு ரிலீஃப் (Relief) கிடைச்சதுன்னா டக்குனு கொஞ்சம் வாங்கிக்கலாம்.
தொகுப்பாளர்: ஓகே சார். அதே மாதிரி வெள்ளி விலையும் கூடுதே, சோ அதுக்கு என்ன காரணம்? அதுல முதலீடு பண்ணலாமா? தங்கம், தங்கத்துக்கு அடுத்தபடி வெள்ளி... இதுக்கு முன்னாடி ரெண்டு வாட்டி குறைஞ்சதா சொல்றாங்க. அதே மாதிரி இப்போ வந்து அப்போ வந்து தொழிற்சாலையில பெருமளவு பயன்படுத்தல, இப்போ பயன்படுத்துறாங்க. அதனால வெள்ளி மதிப்பும் அதிகரிக்கும். நீங்க தங்கத்துக்கு பதிலா வெள்ளியில முதலீடு பண்றது சிறந்த ஒரு இதா இருக்கும்னு சொல்றாங்களே?
திரு. சோம வள்ளியப்பன்: தொழிற்சாலையில பயன்படுத்துறாங்கங்கிறது உண்மைதான். தொழிற்சாலையில பயன்படுத்துறதுனால அது கூடுதலாக அதுக்கு வாய்ப்பு இருக்குங்கிறது ஒன்னுதான். அதெல்லாம் இல்லைங்களே... ஆனா ஒரு விஷயத்தைப் பத்தி நம்ம வந்து அது உண்மையை தவிர அது சொல்லப்படுற கதைகள்தான் முக்கியம் மார்க்கெட்ல. இப்போ இந்த மாதிரி நீங்க சொல்ற மாதிரி இது ஒரு நம்பத்தகுந்த கதை. இதுக்கு நிறைய... இது வந்து இப்போ கிரீன் எனர்ஜி (Green Energy)ங்கிற சோலார் பேனல்ல எல்லாம் வெள்ளி யூஸ் ஆகுது, ஈவி (EV) பேட்டரில எல்லாம் வெள்ளி யூஸ் ஆகுது. தங்கத்துக்கு இல்லாத அளவுக்கு இண்டஸ்ட்ரியல் யூஸ் (Industrial Use) வெள்ளிக்கு இருக்கு.
அதனால வெள்ளி டிமாண்ட் இருக்கும். வெள்ளியை வந்து இயல்புல உருவாக்க முடியாது. இப்ப நீங்க தங்கம் எல்லாம் தங்கமாவே கிடைக்கும், ஆனா வெள்ளின்னு ஒன்னு பூமியில இருந்து எடுக்க முடியாது. மற்ற கனிமப் பொருட்கள் எடுக்கிற போது அதுல இருந்து வர்ற 'பை-பிராடக்ட்' (By-product) தான் அது. அதனால நினைச்சா கூட வெள்ளியினுடைய உற்பத்திய உடனடியா அதிகப்படுத்த முடியாது. இப்படி எல்லாம் பல காரணங்களால வெள்ளி ஏறுது ஒன்னு.
ரெண்டாவது வந்து தங்கத்துக்கும் வெள்ளிக்கும் எப்பயுமே ஒரு குறிப்பிட்ட இடைவெளிதான் இருக்கணும். அந்த இடைவெளி அதிகமானா வெள்ளி வந்து கேட்ச் அப் (Catch-up) பண்ணிக்கும். இன்வெஸ்டார்ஸ் வந்து அதை விட்டு வைக்க மாட்டாங்க. இப்ப தங்கம் ரொம்ப தூரம் ஓடி திரும்பிப் பார்க்குறாரு, "ஓடியா ஓடியா"ங்கிறாரு, "தோ வர்றேனே"னு அவர் பின்னாடி ஓடி வருவான். அவன் வந்துதான் ஆகணும். அதனால இப்போ வெள்ளி வந்து சில சமயங்கள்ல கூடுதலாவே உயர்ந்ததை நம்ம இப்ப பார்த்தோம். இதெல்லாம் வந்து கேட்சிங் அப். அதனால வெள்ளியும் தொடர்ந்து உயரத்தான் செய்யும்.
தொகுப்பாளர்: இது தவிர பங்குச் சந்தையில பங்குகளை வாங்கிட்டு இருக்குற மாதிரி தங்கத்தையும் வெள்ளியையும் கண்ணுல பார்க்காமலே பங்குகள் மாதிரி வாங்கலாம் அப்படிங்கிற ஏற்பாடு வந்து இப்போ ஒரு ரெண்டு மூணு வருஷம் ஆச்சு. எது சிறந்த ஒரு இதா இருக்கும்? நம்ம ஆபரணமாவோ இல்ல ஒரு தங்கக் கட்டையாவோ வெள்ளிக் கட்டையாவோ ஒரு பொருளா வாங்குறது சிறந்ததா இருக்குமா? இல்ல முதலீடு பண்றப்போ அதை டிஜிட்டலா வாங்குறது சரியா இருக்குமா?
திரு. சோம வள்ளியப்பன்: நிச்சயமா டிஜிட்டலா வாங்குறதுதான் சரியா இருக்கும். ஆனா எல்லாருக்கும் டிஜிட்டலா ஹேண்டில் பண்ண தெரியுமா? இப்போ எல்லாருக்கும் டிமேட்னா (Demat) என்னன்னு தெரியாது, அதுக்கு பாஸ்வேர்டுனா என்னன்னு தெரியாது, நினைச்ச நேரத்துல அதை வாங்க விக்க தெரியாது, அது புரியாது. அதனால அதுக்கு அவங்க கொடுக்கிற வேலைதான் அவங்க வந்து பிசிக்கலா (Physical) வாங்குறாங்க.
நீங்க பிசிக்கலா வாங்குற போது அது பியூரிட்டி சரியா இருக்கான்னு செக் பண்ணனும், அதுக்கு 3% ஜிஎஸ்டி கட்டணும், வித்தாலும் கட்டணும். நீங்க டிஜிட்டல்ல அது கிடையாது. டிஜிட்டல்ல புரோக்கரேஜ், எஸ்டிடி (STT) அந்த மாதிரி அந்த பங்குச் சந்தை சார்ந்த குறைவான கட்டணங்கள்தான் அதுல இருக்குது. அது தவிர அதை பாதுகாக்க வேண்டியதில்லை, அதை நம்ம வெரிஃபை பண்ண வேண்டியதில்லை, விலை கரெக்டான்னு செக் பண்ண வேணாம், ஒண்ணுமே வேணாம். அது வந்து உலகம் மொத்தமும் தெரியிற வெளிப்படையான விலைதான். நம்ம வாங்குற குறிப்பிட்ட 'இடிஎஃப்' (ETF) வாங்கலாம். எவ்வளவு தூரம் விலை உயர்ந்ததோ இறங்குச்சோ அதையேதான் நம்ம விக்கிற அன்னைக்கு அதனுடைய விலை மாற்றம் இருக்கும். அதனால வித்தரலாம் சுலபம்னு பார்த்தீங்கன்னா இடிஎஃப்தான், பாதுகாப்புனு பார்த்தீங்கன்னா இடிஎஃப்தான்." என்று தெரிவித்து தனது நேர்காணலை நிறைவு செய்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
.png)
