

சமீபத்தில், நாய்கள் மீதான பிரச்சனை அதிகளவில் அதிகரித்து உள்ளது. மனிதனின் உற்றத் தோழன் என அறியப்படும் நாய்கள் சமகாலத்தில் பெரும் எதிர்ப்புணர்வு கொண்ட ‘aggressive’ ஆன விலங்காக எப்படி மாறிப்போயின என்பது இன்றுவரை விவாதப்பொருளாகவே உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே நாம் திரும்பிய பக்கமெல்லாம் நாய்க்கடி குறித்த செய்திகளை மட்டுமே பார்த்து வருகின்றோம். உண்மையிலே நாய்களும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கடித்து குதறி சித்ரவதை செய்து வருகின்றன. அதிலும் பிட்புல் வகை நாய்கள் மிகத்தீவிரமாக, ஆக்ரோஷமாக தாக்கக்கூடியவை. அப்படி ஒரு கோர சம்பவம் தான் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த காவல் துறையினர் மிக மோசமான உளவியல் சிக்கலுக்கு சென்றுள்ளனர். அப்படி ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பத்தின் பின்னணி இதோ…
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் துல்லாஹோமாவில் உள்ள வீட்டில் புதன் கிழமை பெரும் அலறல் சபதம் கேட்டுள்ளது. 50 வயதான ஜேம்ஸ் அலெக்சாண்டர் ஸ்மித் மற்றும் அவரது 3 மாத பேத்தி அவர்கள் வளர்த்த 7 பிட்புல் வகை நாய்களால் மோசமாக கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வந்து பார்த்தபோது ஸ்மித் ஏற்கனவே இருந்துகிடந்தார், அந்த 3 மாத குழந்தையை நாய்கள் கடிதுகுதறிக் கொண்டிருந்தன. தடுக்க வந்த காவலர்களையும் நாய்கள் கடிக்க வந்தன, வேறு வழியில்லாமல் நாய்களை சுட்டுக்கொன்று, உள்ளே சென்றபோது ‘அந்த கட்சி காவலர்களை உளவியல் ரீதியாக பாதித்து உள்ளதாக’ தலைமை காவலர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பக்கத்து வீட்டுக்காரரான பிரையன் கிர்பி “எட்டு ஆண்டுகளாக அந்த நாய்களால் தொல்லைதான், அவை மிக ஆக்ரோஷமாக இருந்தன, என்னுடைய பூனையையும் கொன்றுவிட்டன, இதுகுறித்து பலமுறை அவர்களிடம் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இப்படி நடந்திருக்க கூடாது” என கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.