
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் தாஜ்கஞ்ச் நகரில் காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது.இதற்கு அருகில் சோதனை சாவடி நிலையத்திற்கு அருகில் ஏ.டி.எம் இயந்திரம் இருந்துள்ளது.
மேலும் அந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இருந்ததாக சொல்லப்படுகிறது.ஏ.டி.எம் இயந்திர மையத்திற்குள் கொள்ளையர்கள் அதிகாலை 2.45 மணியளவில் பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.அவர்களால் ஏ.டி.எம் இயந்திரத்தை திறக்க முடியாத ஒரு கட்டத்தில் தரையை உடைத்து கொண்டு அதனை அப்படியே தூக்கி சென்றுள்ளனர்.
இதன் பின் மறுநாள் ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் சென்ற போது இயந்திரத்தை உடைத்து எடுத்துருப்பதை அறிந்து கொண்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் ஏ.டி.எம் இயந்திரத்தையே தூக்கி சென்ற கொள்ளையர்களை போலீசாரால் தேடப்பட்டு வருகிறது.