பற்றி எரியும் அமெரிக்காவின் வலேரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை..

போர்ட் ஆர்த்தர் துறைமுகத்தில் உள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
பற்றி எரியும் அமெரிக்காவின் வலேரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை..
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் கடற்கரைக்கு அருகில் வலேரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திங்களன்று ஏற்பட்ட பெரிய தீ விபத்தால் பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. வானில் கடும் புகை மண்டலங்கள் எழுந்ததால், இதனால் அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹூஸ்டனில் கிழக்கே சுமார் 90 மைல் (145 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள போர்ட் ஆர்த்தர் துறைமுகத்தில் உள்ள வலேரோ எண்ணெய்  சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மேயர் சார்லட் எம். மோசஸ் தெரிவித்தார். ஈரான் போரின் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த சுத்திகரிப்பு ஆலையில் சுமார் 770 ஊழியர்கள் உள்ளனர், மேலும் அது ஒரு நாளைக்கு சுமார் 435,000 பீப்பாய் எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இந்த ஆலை அதிக செறிவுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரித்து பெட்ரோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருளாக மாற்றுகிறது. இந்த வெடி விபத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்  இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து பெரும் புகை மண்டலமும் தீப்பிழம்புகளும் வெளியேறுவது தெரிகிறது. சில குடியிருப்பாளர்கள் ஒரு பெரிய வெடிச்சத்தத்தைக் கேட்டதாகவும், தங்கள் ஜன்னல்கள் அதிர்ந்ததாக தெரிவித்தனர். 

"உங்கள் பாதுகாப்பிற்காக, அவசரகாலப் பணியாளர்கள் ‘All Clear’ என அறிவிக்கும் வரை, தயவுசெய்து நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள்," என என ஆர்த்தர் துறைமுக நகரம்  தெரிவித்துள்ளது.

டெக்சாஸ் மாநிலப் பிரதிநிதி கிறிஸ்டியன் மானுவல் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஒரு செய்தியில், டெக்சாஸ் சுற்றுச்சூழல் தர ஆணையம் காற்று கண்காணிப்பு உபகரணங்களுடன் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்துள்ளதாகவும், உள்ளூர் மற்றும் மாநில பணியாளர்கள் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். அருகிலுள்ள குடியிருப்பாளர்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கூறினார்.

"தயவுசெய்து வெளிப்புறச் செயல்பாடுகளை தவிர்த்து கொள்ளுங்கள், ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வையுங்கள், மேலும் உள்ளூர் அதிகாரிகள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்," என்றும் வலியுறுத்தியுள்ளார். சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஹீட்டர் அதிக சூடானதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. ஈரான் தாக்குதல் நடத்திவரும் நிலையில் இந்த விபத்தில் ஏதும் ஈடுபட்டதா எனும் கோணத்திலும் விசாரித்து வருவதாக தகவல். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com