செல்ல பிராணிகளால் பரவும் புதிய நோய் மக்களே உஷார்... செப்சிஸை பற்றி எச்சரிக்கும் UK சம்பவம்!

செப்சிஸ் இரத்தக் கட்டியை அசாதாரணமான முறையில் உருவாக்கி, இரத்தக் குழாய்களைத் தடுக்கும்...
செல்ல பிராணிகளால் பரவும் புதிய நோய் மக்களே உஷார்... செப்சிஸை பற்றி எச்சரிக்கும் UK சம்பவம்!
Published on
Updated on
1 min read

உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் நோய்தொற்றுக்கு எதிர்வினையாக உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மிகத் தீவிரமாகச் செயல்பட்டு, உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளையே சேதப்படுத்தும். மேலும் பல உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுக்கும். உடனடி சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலையை கூட உண்டாக்கும். ஆரம்பகால கண்டறிதல் மற்றும் உடனடி மருத்துவ சிகிச்சை ஆகியவை மிகவும் முக்கியமானவை.

பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது நோய்த்தொற்றுகளிலிருந்து பூஞ்சைகள் இரத்த ஓட்டத்தில் நுழைகின்றன, இது உடலில் ஒரு தீவிர நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. செப்சிஸ் என்பது நோயெதிர்ப்புத் தடுப்பு இரசாயனங்களின் அதிகப்படியான இயக்கத்தால் ஏற்படும் நோய்த்தொற்றுக்கு உடலின் அதிகப்படியான எதிர்வினையாகும்.

செப்சிஸின் அறிகுறிகள் உடலின் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம், உயர்ந்த இதயத் துடிப்பு, விரைவான சுவாசம், சிறுநீர் வெளியேற்றம் குறைதல், தோல் நிறமாற்றம் அல்லது வழக்கத்திற்கு மாறாக வெளிர் நிற தோல், குழப்பமான மனநிலை மற்றும் குறைந்த இரத்த அழுத்தம்.

செப்சிஸ் இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளை பாதித்து செயலியக்க செய்யும் செப்சிஸ் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, செப்டிக் ஷாக் எனப்படும் தீவிர நிலையை ஏற்படுத்தும் மேலும் நுரையீரலைப் பாதிக்கலாம், இதனால் சுவாசிக்க கடினமாக இருக்கும். இது கடுமையான சுவாசக் கோளாறு (ARDS) எனப்படும் நுரையீரல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். செப்சிஸ் இரத்தக் கட்டியை அசாதாரணமான முறையில் உருவாக்கி, இரத்தக் குழாய்களைத் தடுக்கும் மற்றும் ஆழமான நரம்பு இரத்த உறைவு (டிவிடி) போன்றவற்றை ஏற்படுத்தும். இந்தியாவில் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 34% பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இறக்கின்றனர்.

UK- வில் 56 வயதான மஞ்சித் சங்காவுக்கு என்பவர். அந்நாளின் வேலை சோர்வை குறைக்க தனது செல்ல நாயுடன் சில நிமிடங்கள் செலவிட்டார். ஆனால் சில மணி நேரங்களில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. உதடுகள் ஊதா நிறமாக மாறி, கைகள் மோசமாக குளிர்ந்தன; சுவாசிக்கவும் கடுமையாக சிரமம் ஏற்பட்டுள்ளது

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது ஆறு முறை இதயநிலை தடை ஏற்பட்டது. உயிரைக் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் அவரது நான்கு உடல் உறுப்புகளை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவர்களின் சந்தேகப்படி, சிறிய காயத்தில் நாய் நாக்கு தொடுதலால் "Sepsis" ஏற்பட்டிருக்கலாம். 32 வாரங்களுக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பிய சங்கா, இப்போது செப்சிஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறுகிறார். “இது யாருக்கும் ஏற்படலாம்; சாதாரணமா எடுத்துக்கொள்ள வேண்டாம் ” என எச்சரிக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com