“பிறப்புறுப்பில் மின்சாரம்.. தடியால் வன்கொடுமை" - உக்ரைன் - ரஷ்ய போரில் அதிகளவில் பாதிக்கப்பட்ட ஆண்கள்! ஐ.நா கூறுவது என்ன?

சோவியத் கால இராணுவக் களத் தொலைபேசியைப் பயன்படுத்தித் அவர்களது பிறப்புறுப்புகளில் மின் அதிர்ச்சி கொண்டு தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
Russia Ukraine War
Russia Ukraine War
Published on
Updated on
2 min read

உக்ரைனில் பொதுமக்கள் மற்றும் போர்க் கைதிகளுக்கு எதிராக ரஷ்யப் படைகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு மற்றும் பிறப்புறுப்புகளில் மின் அதிர்ச்சி கொடுத்தல் உள்ளிட்ட கொடூரமான பாலியல் வன்முறைகளை நிகழ்த்தியது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஆனால், அதே சமயத்தில் உக்ரைனிய அதிகாரிகளும் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் அவை குறைவான விகிதத்தில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2022 அன்று உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய போர் ஒன்றினை தொடுத்தது. அது இன்று வரை முடியாமல் நீண்டவண்ணமே சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், பிப்ரவரி 2022 முதல் ஜூலை 2026 வரையிலான காலகட்டத்தில், போர் மோதல் தொடர்பான 1,004 சரிபார்க்கப்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்களை ஐ.நா-வின் அந்த அறிக்கை ஆவணப்படுத்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில், 89% வழக்குகள் ரஷ்யத் தரப்புடன் தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது. இதில் ஆயுதப் படைகள், சிறைத்துறை மற்றும் பாதுகாப்பு முகமைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவர். அதேசமயம், 11% வழக்குகள் உக்ரைனுடன் தொடர்புடையவை என்று அந்த அறிக்கையில் கூறப்படுகிறது. ஆனால், உக்ரேனியப் படைகளின் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் குறித்த கண்டுபிடிப்புகளைப் பற்றி அந்த அறிக்கை நேரடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போர்முனையின் இரு பக்கங்களிலும் வரம்பு மீறல்கள் பதிவாகியுள்ளன, ஆனால் அவற்றின் போக்கானது முற்றிலும் வேறுபட்டது என்று உக்ரைனில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்புப் பணியின் தலைவர் டேனியல் பெல், கடந்த வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். ரஷ்ய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளிடையே பாலியல் வன்முறையானது அதிகளவில் இருந்தது என்றும், அவர்களில் முன்னாள் போர்க் கைதிகளில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பேரும், காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்களில் ஏறக்குறைய பாதியினரும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சில சந்தர்ப்பங்களில் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் பெல் தெரிவித்துள்ளார்.

மேலும், பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் மீதமுள்ள 11 சதவீதம் உக்ரேனிய அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டவை என்றும், அவற்றில் கிட்டத்தட்ட பாதி வழக்குகள் முழுக்க முழுக்க அச்சுறுத்தல்களையே கொண்டிருந்தன என்றும் கூறப்படுகிறது. மேலும், ரஷ்யாவானது ஆக்கிரமிப்பு செய்த உக்ரேனியப் பகுதி, போர்க் கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை அணுகுவதற்கு ரஷ்யா அனுமதி மறுத்திருந்தது. அதனால் குற்றத்திற்கான உண்மையான அளவீடுகள் குறைந்திருக்கலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் சரி, ரஷ்யா பகுதிகளிலும் சரி ரஷ்ய அதிகாரிகள் உக்ரைனியப் போர்க் கைதிகளுக்கு எதிராகப் பாலியல் வன்முறையை நிகழ்த்தியதோடு, அவர்களை கைது செய்வது, இடமாற்றம் செய்வது, விசாரணை மற்றும் தடுப்புக்காவல் உள்ளிட்ட சிறைவாசத்தின் அனைத்துக் கட்டங்களிலும் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று அறிக்கை கூறுகிறது.

போரில் வெற்றி பெற்றால் தோற்கடிக்கப்பட்ட நாட்டில் உள்ள பெண்களை வெற்றி பெற்ற நாடு, பொருட்களை போல அபகரித்துக்கொள்ளும். அவர்களை உரிமை கொண்டாடுவது போல அவர்களை பாலியல் ரீதியாக சுரண்டும். வரலாறு நெடுக இதுபோன்ற பல நிகழ்வுகளை நாம் பார்த்திருக்க கூடும். ஆனால், இந்த அறிக்கை சற்று மாறுபட்ட விஷயத்தை கூறுகிறது. அதாவது, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாக இருந்துள்ளதாக அறிக்கை கூறுகின்றது.

மேலும், இந்த அறிக்கைக்காக நேர்காணல் செய்யப்பட்டவர்கள், மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்திய அனுபவங்களை பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. ரஷ்யப் படைகளால் சித்திரவதைக்குள்ளான பல உக்ரேனியப் போர்க்கைதிகள் மற்றும் பணியில் இருந்த மருத்துவப் பணியாளர்கள் பலர் 'டாபிக்' என்று அழைக்கப்படும் சோவியத் கால இராணுவக் களத் தொலைபேசியைப் பயன்படுத்தித் அவர்களது பிறப்புறுப்புகளில் மின் அதிர்ச்சி கொண்டு தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அவர்களில் 155 பேர் (27%) குறைந்தபட்சம் ஒரு முறையாவது இந்த முறையை அனுபவித்திருந்ததாக பகிர்ந்துள்ளனர்.

ஒரு உக்ரேனியப் போர்க்கைதி, தடியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், மற்றொருவர் சிறைக்கதவுச் சாவிகளால் வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், உக்ரேனியப் பொதுமக்களில் ஒருவர், மண்வெட்டி கைப்பிடியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பகிர்ந்துள்ளனர். தடுப்புக்காவலில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆண்களாகவே இருந்துள்ளனர். இருப்பினும், முக்கியமாக உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். ஆவணப்படுத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையிலிருந்து மீட்கப்பட்டவர்களில் மிக குறைந்த வயதுடையவராக நான்கு வயது சிறுமி ஒருவரும், மிக வயதானவராக 82 வயது மூதாட்டி ஒருவரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த இரு வன்கொடுமைகளும் ரஷ்ய அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

ஒரு பெண்ணின் வாக்குமூலத்தின்படி, வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழைந்த ரஷ்யா ராணுவ ஒருவர், "அவரது கணவர் பாதுகாப்பாக இருப்பார்" என்று வாக்குறுதி அளித்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். மேலும், தங்களது ராணுவ வீரர்களால் இழைக்கப்படும் பாலியல் வன்முறையைத் தடுக்கவோ, விசாரிக்கவோ அல்லது வழக்குத் தொடரவோ ரஷ்யா நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்றும், மனித உரிமைகள் நீதிமன்றத்தின் (OHCHR) தகவல் கோரிக்கைகளுக்கு அது செவிசாய்க்கவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது .

தங்களது அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இந்த அருவருப்பான செயல்கள் பரவலாக இருப்பது தனக்கு மிகுந்த கவலையை அளிப்பதாகவும், உக்ரைனில் ஒவ்வொரு நாளும் காணும் ஓயாத வன்முறைக்கு மத்தியில், இந்தச் செயல்கள் கட்டாயம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார். மேலும், "குற்றவாளிகள் யாராக இருந்தாலும், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்," என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com